அணை நிரம்பியது
திருப்பத்தூர்மாவட்டம்
22-5-24
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை முழுவதும் நிரம்பியதுதமிழக. ஆந்திரா எல்லையில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளிலும் எல்லையை ஒட்டி உள்ள வனப்பகுதியிலும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழக ஆந்திரா எல்லையில் புல்லூர் கிராமத்தில் உள்ள பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள 12 அடி உயர தடுப்பணை முழுவதும் நிரம்பியுள்ளது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 12 அடி தடுப்பணை கட்டியதால் பாலாற்றில் செல்லக்கூடிய வெள்ள நீர் அந்த தடுப்பணையில் தேங்கி நிற்கிறது.
பாலாற்றில் தடுப்பணை கட்டாமல் இருந்திருந்தால் தமிழக பாலாற்றில் அதிக அளவு நீர்வரத்து இருந்திருக்கும்
தமிழக அரசு பாலாற்றின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டியிருந்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் நீர் சேமித்து வைத்திருக்க வசதியாக இருந்திருக்கும்
என்று.விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment