விழா
ராணிப்பேட்டைமாவட்டம்
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை பொன்னியம்மன் ஆலயத்தில் இரவு 12 மணி அளவில் ஊரில் உள்ள மின்விளக்குகள் அனைத்து தீப்பந்தங்கள் இயங்கியவாறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பொன்னியம்மன் எல்லை திருவீதி உலா - மழை வேண்டி விவசாயம் செழிக்க தீபந்தங்கள் ஏந்தியவாறு பொதுமக்கள் பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த தெங்கால் பகுதியில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராம தேவதை பொன்னியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்தவகையில் ஐந்து நாள்கள் நடைபெறும் பொன்னியம்மன் திருவிழாவின் 4 வது நாளான இன்று இரவு 11 மணி அளவில் ராம தேவதையான பொன்னியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரவு 12 மணி அளவில் ஊரில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் அனைக்கப்பட்டு வினோதமான முறையில் ஊர் மக்கள் கையில் தீ பந்தங்கள் ஏந்தியவாறு மழை பொழிய வேண்டியும் அந்த மழையினால் விவசாயம் செழிக்கவும் ஊர் வளம் பெற வேண்டி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் இருந்த பொன்னியம்மனை கிராம மக்கள் தோலில் ஏந்திவாறு ஊரில் உள்ள ஒவ்வொரு வீதி வழியாக ஊரின் எல்லையை சென்றடைந்தனர்
இந்த திருக்கல்யாணம் மற்றும் பல்லக்கு எல்லை வீதி உலாவில் தெங்கால் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு பொன்னியம்மன் அருள் பெற்றனர்
Comments
Post a Comment