பணம்

பணம் நம்மைக் கையாளக் கூடாது. 

 _*பாசிட்டிவ்வாக வாழ்க்கையை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல...*_
_*ஆனால்...*_
 _*பழக்கப்படுத்திவிட்டால் வாழ்க்கையில் நீங்கள்*_
_*சந்தோஷமாக இருப்பதை*_
_*யாராலும் தடுக்க முடியாது .*_

 _*மண் போல் மனதை*_
_*மாற்றிவிடுங்கள்....*_
_*நல்ல சிந்தனைகளை முளைக்கவிடுங்கள்.....*_
_*கெட்ட சிந்தனைகளை*_
_*மக்க செய்து விடுங்கள்.*_

_*பரிந்துரை ஒருவரை அறிமுக மட்டுமே*_ _*செய்யும்.*_
_*தகுதி தான் அவரை நிலை பெறச் செய்யும்*_

*இருப்பதை வைத்து வாழ பழகிக் கொண்டவர்கள்....*
*இல்லாத போதும் வாழ பழகிக் கொள்கிறார்கள்.*

*கேள்வி:*
உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட 10 விஷயங்கள் யாவை. 

*பதில்:*
நாம ஒன்னும் பெரிய தத்துவஞானி எல்லாம் கிடையாதுங்க. சும்மா எனக்கு தெரிஞ்ச ஒரு நாலு வார்த்தைய மட்டும் சொல்லுறேன்.

1.முகத்தில் ஒரு சிறிய புன்னகை - நமக்கு வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை அளிக்கும்.

2.பணத்தை நாம் கையாள வேண்டும். பணம் நம்மைக் கையாளக் கூடாது.

3.அன்பு-அழகான பொக்கிஷம். அதை பத்திரமாக பயன்படுத்துங்கள்.

4.கோபம்- வரவேண்டிய இடத்தில் வராவிடில் பயனற்றது. வரக்கூடாத இடத்தில் வந்தால் ஆபத்தானது.

5.கற்றுக்கொண்டே இருங்கள்.
உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. உலகில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
*"மாற்றம் ஒன்றே மாறாதது".*

6.அன்னத்தைப் போல் இருங்கள். தீதையும் நன்றையும் பிரித்தறிய கற்றுக்கொள்ளுங்கள்.

7.உனக்கு நீதான் துணை.

8.ஊர் வாய மூட முடியுமானு தெரியாது. ஆனா உங்க காதை மூடலாம். உங்களுக்குத் தேவையில்லாத உங்கள புண்படுத்தற விஷயங்களுக்கு.

9.அடுத்தவன் விஷயத்தில நாம நல்லது பண்றோமோ இல்லயோ
கெட்டது பண்ணக் கூடாது.

10.எது செஞ்சாலும் செய்யறதா இருந்தாலும் அதுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கணும்.அத ஒழுங்கா செய்யணும். அப்போதுதான் அது நல்ல காரியமாக ஆகும்.

 _*முடிந்த வரை மனிதர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.*_
_*அறிவுரைகள் புத்தகங்களிலேயே கிடைத்து விடும்.*_

 _*எந்த எல்லைக்கும்*_
_*போகலாம் என்ற*_
_*நிலை இருந்தும்...*_
_*தன்னையும் ஓர்*_
_*கண்ணியமான*_
_*எல்லைக்குள்*_
_*நிறுத்தி*_
_*வாழ்பவனே...*_
_*நல்ல மனிதன்.*_

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்