புகார்
திருப்பத்தூர்மாவட்டம்
வக்கனம்பட்டி கிராமத்தில் பைனான்ஸ் எம்டியாக இருந்து சீட்டு நடத்தி பணத்தை ஏமாற்றிய நபரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10க்கும் மேற்பட்டோர் எஸ்பி அலுவலகத்தில் புகார்! பணத்தை மீட்டு தர கோரி கதறி அழுந்து பேட்டி கொடுந்த கேன்சர் நோயாளி
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புது ஓட்டல் பகுதியைச் சேர்ந்த தமிழரசி (கேன்சர் நோயாளி) மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அழித்தனர்.அந்த மனுவில் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த தமிழரசி, பாரதி, சரோஜா, மற்றும் உஷா ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த பத்து வருடத்திற்கு முன்பு வக்கணம் பட்டி கிராமத்தில் விநாயகா பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நடத்தினோம்.இந்த நிலையில் உஷாவின் கணவர் நந்தி மலை என்பவரை பைனான்ஸில் எம்டியாக பணியமர்த்தி அவருடைய தலைமையில் பைனான்ஸ் நடத்தப்பட்டது.அதன்பின்னர் பைனான்ஸ் மூலம் சீட் ஆகவும் நடத்தினோம்.இந்த நிலையில் பங்குதாரர்கள் நான்கு பேருக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் இந்த சீட்டில் ஒன்றிணைந்து சீட்டு நடத்தப்பட்டது.அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு பைனான்ஸ் இன் கணக்கு வழக்குகளை சரி பார்த்து பங்குதாரர்களுக்கு பிரித்து விட்டோம்.அதன் பின்னர் நந்தி மலை என்பவர் தனியாக சீட்டு நடத்தி வந்தார். பங்குதாரர்கள் இணைத்துவிட்ட தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் 10 பேருக்கு இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக நந்தி மலை கொடுக்கவில்லை எனவே இது குறித்து ஊர் பெரியோர்களிடம் கூறினோம் ஆனால் ஊர் பேரியோர்களின் பேச்சையும் நந்தி மலை கேட்கவில்லை அதனைத் தொடர்ந்து நந்திமலை நீங்க எங்க வேண்டுமானாலும் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு கவலை இல்லை எனவும் மேலும் சீட்டுக்கட்டியவர்களை அவதூறாகவும் பேசி வருகிறார்.இதனால் ஆத்திரமடைந்த சீட்டு கட்டிய பத்துக்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் மனு அளித்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment