சீரமைப்பு பணிகள்

ராணிப்பேட்டைமாவட்டம்    
 

 சோளிங்கர் பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்க உடைந்த குடிநீர் பைப்புகளை சீரமைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர் 

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட  27  வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் வழியாக செய்ய பொன்னை ஆற்றில் இருந்து பைப்லைன் மூலம்  நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  சின்ன நாகபூண்டி சோளிங்கர் செல்லும் சாலையில்  கடந்த மூன்று நாட்களாக குடிநீர் பைப் லைன் 12 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உடைந்த பைப் உடனடியாக சீரமைக்க வேண்டும் என  நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர் . புகாரை ஏற்றுக் கொண்ட நகராட்சி நிர்வாகம் உடனடியாக  ஜேசிபி இயந்திரம் மூலம் நகராட்சி பணியாளர்கள் கொண்டு உடைந்த குடிநீர் பைப் லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். புகார் அளித்த சில மணி நேரங்களிலேயே பைப்லைன் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை