விழா

ராணிப்பேட்டைமாவட்டம்    

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் வைகாசி கருட சேவை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர்  அருள்மிகு  ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவிலில் வைகாசி  கருடசேவை பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கருட சேவை  பிரம்மோற்சவம் முன்னிட்டு பக்தோசிப்பெருமாள் சுவாமிக்கு சிறப்பு பூஜை‌ அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கருட வாகனத்தில் பக்தோசி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாத வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.வீடு தோறும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து சாமியை வழிபட்டனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை