அஞ்சலி
வேலூர்
வேலூர் அருகே தீவிரவாத தாக்குதலில் 1998 ஆம் ஆண்டு பலியான வீரரின் நினைவு தினமான இன்று சி.ஆர் பி.எப் டி.ஐஜி நேரில் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் இந்த ஆண்டு முதல் தீவிரவாத தாக்குதலில் பலியாகும் வீரர்களின் வீடுகளுக்கே சென்று அஞ்சலி செலுத்தும் திட்டம் துவக்கம்
___________________________________________
வேலூர்மாவட்டம்,பென்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு இவர் 1994 ஆம் ஆண்டு சி.ஆர் பி.எப் பாதுகாப்பு படையில் சேர்ந்தார் 1998 ஆம் ஆண்டு ஜுலை 10 ஆம் நாள் ஆந்திர பிரதேசத்தில் பாசாரவில் மாவோயிஸ்ட்டுகள் குண்டு வெடிப்பு செய்து கண் மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் துணிச்சலாக எதிரியை தாக்கி வீரமரணமடைந்தார்கள் 8 பேர் அதில் வேலுவும் ஒருவர் சி.ஆ.ர்பி.எப்பில் தேச பக்தியை எடுத்து காட்டும் வண்ணம் மத்திய அரசு இந்த மார் ச் மாதம் முதல் இது போன்று பாதுகாப்பு பணியின் போது தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் வீடுகளுக்கு அவர் உயிர் தியாகம் செய்து வீரமரணமடைந்த நினைவு நாளில் நேரில் சென்று அதிகாரிகள் படத்தை அலங்கரித்து அஞ்சலி செலுத்து குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டதன் அடிப்படையில் பென்னாத்தூரில் சி.ஆர் பி.எப் டி.ஐஜி தினகரன் நேரில் வந்து வேலுவின் தாயார் பச்சையம்மாளுக்கு ஆறுதல் கூறியதுடன் அங்கு அலகரித்து வைக்கப்பட்ட வேலுவின் படத்திற்கு சி.ஆர்பி எப் வீரர்கள் மற்றும் டி.ஐஜி தினகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அஞ்சலியை செலுத்தினார்கள்
Comments
Post a Comment