ரத்த தான முகாம்
வேலூர்
வேலூரில் மூலிகைக்கண்காட்சி மற்றும் மருத்துவமுகாம் ரத்ததான முகாம் திரளானோர் பங்கேற்றனர்
_________________________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூரில் அப்பாஜி சுவாமிகள் தலைமையில் இலவச சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவ முகாம் மற்றும் மூலிக்கைக்கண்காட்சி மற்றும் ரத்ததான முகாமினை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் துவங்கி வைத்தார் இதில் சித்த மருத்துவ முகாம் டாக்டர் பாஸ்கரன் தலைமையிலும் ஆங்கிலம் மருத்துவ முகாம் சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் டாக்டர் பிரகாஷ் ஐயப்பன் தலைமையிலும் நடைபெற்றது இதே போன்று மூலிகைக்கண்காட்சி பாரம்பரிய மருத்துவ சங்கத்தை சேர்ந்த செல்வம் தலைமையிலும் நடைபெற்றது இதில் அரிய வகை மூலிகைகள் அதன் பயன்கள் தீர்க்கும் நோய்கள் குறித்தும் இம்முகாமில் எடுத்துரைக்கப்பட்டது ரத்ததான முகாமும் நடைபெற்றது இதில் திரளானோர் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்
Comments
Post a Comment