அவதி

திருப்பத்தூர்மாவட்டம்    


 வாணியம்பாடி அருகே பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் கூலித் தொழிலாளியின் வீடு பாதியில் நிறுத்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்ஜன்னல் கதவு மற்றும் மற்றும் கட்டுமான பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் மட்டுமே கட்டித் தரப்படும் என ஒப்பந்ததாரர் தெரிவித்ததால் நான்கு ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்கப்படாமல் குடிசை வீட்டில் மழைக் காலங்களில் அவதிப்பட்டு வரும் கூலித்தொழிலாளியின் குடும்பம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட காமராஜர் நகர்  பகுதியை சேர்ந்தவர் ரபிக் கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் . வசதி இல்லாமல் ஓலை குடிசை வீட்டில்  வாழ்ந்து வரும் ரபிக் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் இவருக்கு வீடு ஒதுக்கப்பட்டு அதற்கான ஆணை வந்ததாகவும், வீடு கட்டும் திட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் பணம் கேட்டு கொடுக்காததால் வீடு  கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சிகளில் வந்த செய்தியை பார்த்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரஃபிக் வீடு கட்டுவதற்கான பணி ஆனையை வழங்கி ஒப்பந்ததாரர் ஒருவருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு அதை கட்டிக் கொடுக்கும்படி அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு  ரபிக்கின் வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு மற்றும் பல்வேறு ஆவணங்கள், நூறு நாள் வேலை திட்ட அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்பந்ததாரர் வாங்கிக் கொண்டு  பணிகளை தொடங்கியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வீடு 70% பணிகள் கட்டி முடிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நிலுவையில் வைத்துள்ள நிலையில் ரஃபிக் பலமுறை ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் வீடு கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் வீட்டிற்கு தேவையான ஜன்னல் கதவு மற்ற கட்டுமான பொருட்கள் வாங்கி கொடுத்தால் மட்டுமே மீதமுள்ள பணிகளை முடிக்கப்படும் என  இல்லையென்றால் கட்ட முடியாது நீ எங்கு வேண்டுமானாலும் சென்று சொல் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டும் தோணியில் ஒப்பந்ததாரர் பேசுவதாக தெரிவிக்கும் ரபிக் வீடு கட்டத் திட்டத்தின் கீழ் வங்கியில் வரும் தொகையினை எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை மேற்கொள்ளாமல் அலைக்கழித்து வரும் ஒப்பந்ததாரர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் ஒப்பந்ததாரர் கூறியபடி செய்து கொள் என அதிகாரிகள் தெரிவிப்பதாக கூலித்தொழிலாளி ரஃபிக் வேதனை தெரிவிக்கின்றார். 


மேலும் நான்கு ஆண்டுகளாக வீடு கட்டி முடிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால் பழைய ஓலை குடிசை வீட்டில் ரபீக் மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருவதால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகவும் இதனால் தன்னுடைய மகள் இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் சிறப்பு வகுப்பு பயிற்சிக்கு போக முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருவதால் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தங்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி திட்டத்தின் கீழ் கட்டப்படும் இலவச வீடு முழுமையாக கட்டி முடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்



Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்