காலம் ஒரு புதிர்
*கிட்டத்தட்ட இவர்களின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று கருதப்பட்ட 74 வயது சந்திரபாபு மற்றும் 73 வயது நிதிஷ்குமார்....!*
*இவர்கள் இருவருக்கும் ... காலம் மிகப்பெரிய வாய்ப்பை அளித்துள்ளது...*
*இவர்கள் இருவரும் இணைந்து யாரைக் கைகாட்டுகின்றனரோ.... அவர்தான் பிரதமராக முடியும்..! என்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது...*
*சந்திரபாபு அவர்கள் சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் நாள் தேதி தர முடியாது என சொல்லி அவமானப்படுத்தி மரியாதை கொடுக்காததன் விளைவாக இதே சந்திரபாபு மிகப்பெரிய ஏமாற்றத்தோடும் கனத்த இதயத்தோடும் திரும்பி வந்தார்*
*எந்த சந்திரபாபுவை அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தி விரட்டியடித்தார்களோ ....! அதே சந்திரபாபுக்காக.....! அவரின் ஆதரவு வேண்டும்...! அவரின் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும்....! எனவே அவரை சந்திக்க நாள் தேதி இடம் கேட்டு ஆதரவுக் கடிதத்திற்காக பிரதமர் காத்திருக்கிற வேண்டிய நிலை...*
*காலம்தான் எத்தனை விசித்திரமானது...???*
*ஆதலால் "நமக்கு எல்லாமே முடிந்துவிட்டது" என்று எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் யாருமே நம்பிக்கை இழக்கத் தேவையில்லை..
Comments
Post a Comment