பொய்யோடு ஏன் வாழ வேண்டும்
குணமும் பணமும் ஒன்றுதான்.
_*எங்கும் எதிலும் எந்த உத்திரவாதமும் நாளை நமக்கு இல்லாத போது,*_
_*நாம் ஏன் பொய்யோடும், பொறாமையோடும்,பகையோடும்,*_ _*பாவத்தோடும்,தீங்கோடும், திமிரோடும் நம்*_ _*வாழ்க்கையை*_
_*நாம் வாழவேண்டும்!*_
_*அர்த்தமுள்ள வாழ்க்கையை*_
_*வாழ்வோமே*_
_*வயதாக வயதாகத் தான் தெரிகிறது*_
_*நம் வாழ்நாள் முழுவதும் உடன் வர யாரும் இல்லை என்று.*_
_*தனியா தானே வந்தாய். தனியாக தான் போக வேண்டும் என்று இந்த வாழ்க்கை கற்றுத் தருகிறது.*_
_*தவிக்கும் போது துடுப்பை தராதவர்கள் கரை சேர்ந்த பின் கப்பலை அனுப்பி என்ன பயன் ?*_
_*புரிந்து கொண்டவர்கள் வெறுப்பதில்லை, பிரிந்து செல்ல நினைப்பவர்கள் நிலைப்பதில்லை.*_
_*சாதனையில் கை கோர்ப்பவரை விட, சோதனை காலங்களில் உங்களை கை பிடிப்பவரே உண்மையானவர்கள் அவர்களை இழந்து விடாதீர்கள்.*_
_*உறவு என்பது ஒரு புத்தகம், அதில் தவறுங்கறது ஒரு பக்கம்.*_
_*ஒரு பக்கத்திற்காக ஒரு புத்தகத்தையே வீணாக்கிவிடாதீர்கள்.*_
*நிதானமாக யோசித்து பாருங்கள்*
*நிதானத்தின் அருமையை*
*நிதானமாக உணர்வீர்கள்.*
குணமும் , பணமும்
ஒருவகையில் ஒன்றுதான் மனிதர்களிடத்தில் அவை நிலையாக இருப்பதில்லை.
ஆயிரம் தானம் தர்மங்களைக்
காட்டிலும் உத்தமமானது,
மனச்சாட்சி உள்ள
மனிதனாய் வாழ்வது.
பிறர் குற்றங்களை
மன்னிக்கும் குணம்,
குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
வெட்டினாலும், எரித்தாலும் சந்தனம் மணத்தையே தரும், அதுபோல் தான் நல்லவர்களின் குணங்களும் எக்காலத்திலும் மாறுவதில்லை.
இதுதான் இயற்கை என்று உணர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் நகர்ந்து செல்லுங்கள்.
_*நிரந்தரமானவற்றை தேடுங்கள்..*_
_*தற்காலிகமானவற்றில்*_
_*தேங்கி நிற்காதீர்கள்....*_
Comments
Post a Comment