கிறுக்கன்



தமிழ் கிறுக்கன்

முயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்

பழமொழிகள்

எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை.
குதிர் என்பது நெல்லைச் சேமிப்பதற்காகக் களிமண்ணால் செய்த பெரிய கூடு. மரப்பத்தாயம் போன்றது.




ஆனால் உருளை வடிவம். அதனுள் ஓர் ஆள் இறங்கி நிற்க இயலும்.
கடன் தந்தவர் வருவதைக் கண்ட ஒருவர், தாம் ஒளிந்திருப்பதைச் சொல்ல வேண்டாம் என்று தம்முடைய குழந்தையிடம் எச்சரித்துவிட்டுக் குதிருக்குள் பதுங்கிக் கொண்டாராம். அந்தப் பிள்ளையோ, வந்தவர் எதுவும் கேட்பதற்கு முன்பே புத்திசாலித்தனமாய் பேசுவதாய் எண்ணி, "எங்கப்பா குதிருக்குள்ளே இல்லே!" என்றதாம். இதைக் கேட்டவுடனே உண்மையைப் புரிந்து கொண்டுவிட்டார் வந்தவர்.
ஒரு விஷயத்தைச் சாமர்த்தியமாக மறைப்பதாய்க் கருதித் தன்னையறியாமலே போட்டு உடைத்துவிடுகிற அப்பாவித்தனத்தைக் குறிக்க இப்பழமொழி உதவுகிறது.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

16, 17ஆம் நூற்றாண்டுகளில் செம்பு, இரும்பு முதலிய உலோகங்களை விலையுயர்ந்த பொன்னாக மாற்றுவதற்கு மேல் நாட்டு அறிவியலாளர் சிலர் முயன்றனர். அவர்களுக்கு ஆங்கிலத்தில் ஏல்க்கெமிட்ஸ் (alchemists) என்று பெயர். பாதரசம், பலவகை அமிலங்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி ஏராளச் சோதனைகளை மேற்கொண்ட அவர்கள், குறிக்கோளை எட்டவில்லையாயினும், வேதியியல் என்னும் அறிவியல் துறை தோன்றவும், வளரவும் காரணகர்த்தா ஆயினர்.
தமிழகத்திலும் அந்த முயற்சி நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் ரசவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். பொன் செய்யும் மருந்தை கண்டுபிடிக்கமுடியும் என அவர்கள் நம்பியது போலவே துறவி தாயுமானவரும் (அவர் ரசவாதியல்ல ஆயினும்) நம்பினார்.
வெந்தழலில் இரதம்வைத்து ஐந்துஉலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்
என்று அவர் பாடினார்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்