இடியாப்ப சிக்கல்
"
சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood
பாலு சத்யா
‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது!
சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்திய உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சயா (K.T.Achaya), முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று தன் `தி ஸ்டோரி ஆஃப் அவர் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் `நூல்புட்டு’, கன்னடத்தில் `நூபுட்’, மலேஷியாவில் `புட்டுமாயம்’... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு.
இடியாப்ப சிக்கலா?
மீள முடியாத கஷ்டத்தை இடியாப்ப சிக்கல் என்பர். இவ்வாறு சிக்கித் தவிப்பவர்கள், வணங்க வேண்டிய தெய்வம், அனுமனின் தாயான அஞ்சனா தேவி. இக்கட்டான சூழலில் தவித்த மன்னன் ஒருவனை காப்பாற்றினாள். இவளை, தங்கள் குலதெய்வமாக கொண்டுள்ளனர், இமாச்சல பிரதேச மக்கள்.
ஒருமுறை ராமனைத் தரிசிக்க அயோத்தி புறப்பட்டார், காசிராஜன். வழியில் சந்தித்த நாரதர், 'நீ அயோத்தி சென்று, அவையிலுள்ள எல்லாரையும் வணங்கு. விஸ்வாமித்திரரை மட்டும் வணங்காதே...' என்றார்.
மன்னன் காரணம் கேட்க, 'சொன்னதை செய், இல்லாவிட்டால், ஞானியான என் சொல்லை மீறிய பாவத்துக்கு ஆளாவாய்...' என, எச்சரித்தார்.
காசிராஜனும் அவ்வாறே செய்ய, ராமனிடம் புகார் செய்தார், விஸ்வாமித்திரர். கோபமடைந்த ராமன், 'இன்று மாலை மூன்று அம்புகளை எய்வேன். அதில் ஒன்று, காசிராஜனைக் கொன்று விடும்...' என, வாக்களித்தார்.
நாரதரிடம் ஓடிய மன்னன், 'உங்களால் சிக்கலில் மாட்டிக் கொண்டேனே...' என, கதறினான்.
'கவலைப்படாதே... நீ அனுமனின் தாய் அஞ்சனா தேவியிடம் செல். அவள் காலைப் பிடித்து, 'ஒரு சிக்கலில் இருக்கிறேன், காப்பாற்றுங்கள்...' என்று மட்டும், மூன்று முறை சொல். அவளும், மூன்று முறை, 'காப்பாற்றுகிறேன்...' என சொல்லும் வரை காலை விடாதே...' என்றார். மன்னனும் அவ்வாறே செய்ய, அஞ்சனாவும் காப்பாற்றுவதாக உறுதியளித்தாள்.
பின்பு தான், ராமபாணம் பற்றிய தகவலை மன்னன் சொல்ல, அவள் அதிர்ந்தாள். ராமபாணத்தை தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. தன் மகன் அனுமனிடம், இந்த விஷயத்தை சொல்ல, அவர், ராமனிடம் சென்றார்.
'ராமா... உன்னிடம் நான் எதையும் கேட்டதில்லை. இன்று கேட்கிறேன், தருவாயா?' என்றவர், 'உன் திருநாமம் சொல்பவரை, எந்த ஆபத்தும் அணுகக் கூடாது. இதுவே நான் கேட்கும் வரம் என்றான்.
ராமனும் வரம் கொடுத்தார். மன்னன் உயிர் பிழைத்தார். இது தான் இடியாப்ப சிக்கல்.
Comments
Post a Comment