கோபம் கவிதைகள்
கோபம் கவிதைகள் வரிகள்
KOVAM KAVITHAIGAL
இந்த தொகுப்பு “கோபம் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.
கோபம் கவிதை வரிகள்
கோபம் கவிதைகள்
Kovam Kavithaigal Tamil
கோபம் கவிதைகள் வரிகள்
நேர்மையாக இருப்பவர்களுக்கு
கோபம் அதிகமாக வரும்..
காரணம் ஏமாற்றங்களை
தாங்கும் சக்தி அவர்களுக்கு
இருப்பதில்லை..!
கோபம் எனும் இருட்டில்
விழுந்து விடாதே.. பிறகு
பாசம் எனும் பகல்
கண்ணனுக்கு தெரியாது..!
கோபம் வருவதற்கு தகுதியே
உரிமை தான்.. உரிமை
இருந்தா தான் கோபமும்
செல்லுபடியாகும்.. அன்பு
இருந்தா தான் அந்த கோபமும்
மதிக்கப்படும்..!
உன் கோபம் காற்று மோதியதும்
உதிர்ந்திடும் இலையை போல..
என் கவிதையை பார்த்ததும்
மறைந்து போய்விடும்..!
வராத போது வரும் கோபம்..
நீ வரும் போது வராததால்..
கோபம் கோபமாய் வரும்
இந்த கோபத்தின் மீது..!
உள்ளே அடக்கி வைத்து
அதி வன்மத்தோடு வெளியேறும்
உச்ச கட்ட கோபம்..!
கோபத்திற்கு விளக்கம்
கேட்காமல்.. அதை புறக்கணித்து
அரவணைக்கும் உறவு..
ஒரு ஈடு இணையற்ற
வரம் தான்..!
உன் மீதுள்ள கோபங்களை
எல்லாம் முற்றாக அழித்து
விட்டேன்.. என் கண்ணீர்த்
துளிகளைக் கொண்டு..!
கோபத்தில் கூட இழக்காத
நிதானமும் கொட்டாத
வார்த்தைகளும் வருமுன்
காக்கும் மருந்துகள் தான்..!
ஒவ்வொரு முறை
சமாதானத்திற்கு பிறகும்..
விழுங்கப்படுகிறது சில
நியாயம் கிடைக்காத
கோபங்கள்..!
கோபம் என்பது அடக்கப்பட
வேண்டியது அல்ல..
கடக்கப்பட வேண்டியது..!
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தக்கூடிய ஒன்று
அமைதி.. எந்த சூழ்நிலைக்கும்
பொருந்தாத ஒன்று கோபம்..!
உண்மை இருக்கும் இடத்தில்
பிடிவாதம் இருக்கும்..
நேர்மை இருக்கும் இடத்தில்
நல்ல நடத்தை இருக்கும்..
அதித அன்பு இருக்கும்
இடத்தில் கோபம் இருக்கும்..!
உன் கோபம் கூட ஒருவகையான
அன்பு தான் நீ வரும் வரை
உனக்காக காத்திருப்பேன்..!
Comments
Post a Comment