முதலாவது பொதுக்குழு கூட்டம்
முதலாவது பொதுக்குழு கூட்டம்
சென்னை: சென்னை அண்ணாநகர் வெஸ்டன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திட்டம் 205 ல் செயல்பட்டு வரும் ELITE ENCLAVE WELFARE ASSOCIATION முதலாவது பொதுக்குழு கூட்டம் கடந்த 16 ம் தேதி மாலை 4:00 மணிக்கு குடியிருப்பு தரைதளத்தில் நடந்தது.
சங்க தலைவர் திரு. சரவணன் வரவேற்றார். தொடர்ந்து குடியிருப்பு சட்ட திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். சங்க செயலாளர் திரு. தினகரன் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தார். சங்க பொருளாளர் திரு. பழனியப்பன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
தொடர்ந்து நமது குடியிருப்பில் நடந்து வரும் டிரைனேஜ் சிஸ்டம் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அதை சரி செய்ய எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து தலைவர் திரு. சரவணன் விரிவாக பேசினார். பின் உறுப்பினர்கள் விவாதம் நடந்தது. அதில், குடியிருப்பில் உள்ள பிரச்சனைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினர்.
அவற்றை சரி செய்வது பற்றி நிர்வாகிகள் கலந்து பேசி உரிய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
பின் சங்க நிதி நிலை, அதை சரி செய்ய மாதா மாதம் ரூ 500 உறுப்பினர்களிடம் வசூலிப்பது, அதை கொண்டு சிறிய பிரச்சனைகளை நாமே சரி செய்து கொள்வது, குடியிருப்பு வளாகத்தில் வாக்கிங் செல்பவர்கள் வசதிக்காக மூன்று இடங்களில் பென்ஞ் அமைக்கவும், குடியிருப்பில் சிசிடிவி கேமரா, பெயர் பலகை, சம்ப், தண்ணீர் தொட்டி கிளின் செய்வது, ஆர்ட்கிடெக் அறிக்கையில் உள்ள பிரச்சனைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற பிரச்சனைகளை சரி செய்ய தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உயர் அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து நிறைவேற்ற வழிவகை செய்யவும் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பார்க், சமூதாய கூடம், விளையாட்டு திடல் ஆகியவற்றை சங்கமே பராமரிக்க சென்னை மாநகராட்சிஅதிகாரிகளிடம் கேட்பது, குடியிருப்பை சுற்றி மரம், செடிகள் வளர்ப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணை செயலாளர் திரு. மோத்திசிங், சங்க உறுப்பினர்கள் திரு. நரசிம்மன், திரு. விஜயன், திரு. விஜய் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். துணை தலைவர் செந்தில் நன்றி கூறினார்.
Comments
Post a Comment