திறப்பு
ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் கூடலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி 19 லட்சம் மதிப்பிலான வகுப்பறைகள் திற்டக்கப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கூடலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கூடுதலாக பள்ளி கட்டிடம் வேண்டுமென பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர். கோரிக்கை ஏற்று அரசு கடந்த ஆண்டு 19 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை கட்டி முடித்தது .தற்போது பள்ளி துவக்கம் முதல் நாளான இன்று மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புதிய கட்டிடம் திறப்பு விழா ஒன்றிய குழு தலைவர் கலைக்குமார் துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய இரண்டு வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவர்கள் பயண்பாட்டிற்க்கு கொண்டு வந்தார் மாணவ மாணவிகள் பொதுமக்கள் இனிப்பு வழங்கினார்கள். மற்றும் ஆசிரியர்கள் ,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment