கைது
திருப்பத்தூர்மாவட்டம்
வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய 2 பேர் கைது.11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல். வாகன தணிக்கையின் போது நகர போலீஸார் நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக நகர காவல் நிலையத்தில் புகார்கள் வந்த வண்ணம் இருந்து வந்தது.இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர போலீசார் வாணியம்பாடி - பெருமாள்பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் மற்றும் தாலுக்கா அலுவலகம் பின்புறம், முனீஸ்வரன் கோயில் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தும்பேரி பகுதியை சேர்ந்த அய்யப்பன்(28), சிக்னாங் குப்பம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (23) ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது முன்னுக்கு பின் பதில் அளித்ததால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதன் பேரில், பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 11 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர், பின்னர் அவர்களை கைது செய்து வாணியம்பாடி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment