இடியாப்பம்

"
 
 


சிக்கலோ சிக்கல் இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது! #HealthyFood


‘இடியாப்பேம்ம்ம்ம்...’ அநேகமாக இந்தக் குரல் ஒலிக்காத தமிழகத்தின் பெருநகரங்களே இன்றைக்கு இல்லை என்று சொல்லிவிடலாம். குரலைக் கேட்டவுடனேயே, சைக்கிள் கேரியரில் வைத்துக் கட்டப்பட்ட பெரிய பாத்திரம் நம் கண்களுக்குத் தெரியும். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம் போன்ற நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் இப்படி வீடு வீடாகப் போய் இடியாப்பம் விற்கிறவர்கள் அதிகம். உணவுத் துறையில் வளர்ந்துவரும் முக்கியமான தொழிலாக உருவெடுத்துவிட்டது இடியாப்ப விற்பனை. இது ஒரு வகையில் நல்லதும்கூட. பீட்சா, பர்கர், நூடுல்ஸ் மோகத்தின் பிடியில் இருந்து கொஞ்சம் தமிழர்களாவது தப்பித்திருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்! உண்மையில் சிக்கல் நிறைந்த இடியாப்பம்... உடலுக்கு எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாது!

சங்க காலத்திலேயே இடியாப்பம் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. `சூடாமணி நிகண்’டில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது. `இடி’ என்றால் நெல்லில் இருந்து தயாராகும் மாவு, அதில் செய்யப்படும் அப்பம் என்பது இதன் பொருள். இந்திய உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி.அச்சயா (K.T.Achaya), முதலாம் நூற்றாண்டிலேயே இடியாப்பம் இந்தியாவில் இருந்தது என்று தன் `தி ஸ்டோரி ஆஃப் அவர் ஃபுட்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தமிழில் `நூல்புட்டு’, கன்னடத்தில் `நூபுட்’, மலேஷியாவில் `புட்டுமாயம்’... என அழைக்கப்படும் இடியாப்பம் இலங்கை வரை பிரபலமான ஓர் உணவு.  கடலோரப் பகுதிகளிலும், நகரத் தெருக்களிலும் தெரு வியாபாரிகள் சாப்பிடுவது இடியாப்பத்தை தான்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்