ஆர்பாட்டம்
தொடகக் கல்வி ஆசிரியர் கூட்டமைப்பினர் அடையாள வேலை நிறுத்தம்
ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம்
&&&&&&
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் அமைப்பினர் 234 அரசாணை இரத்து செய்ய கோருதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த கோருதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்தல், முடக்கப்பட்ட ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் வழங்க கோருதல் உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழ்நாட்டின் தொடக்க கல்வியை பாதுகாக்க கோரியும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தியும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு டிடோஜாக் பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சகேயு சத்தியுகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ஜோசப் அன்னையா, எம்.குப்புராமன், அல்போன்ஸ்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினரும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான முனைவர் செ.நா.ஜனார்த்தனன் வாழ்த்தி பேசினார்.
டிடோ ஜாக் மாநில உயரமட்ட குழு உறுப்பினர் வ.முருகன் நிறைவுறையாற்றினார்.
Comments
Post a Comment