ஆர்பாட்டம்
*தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி*
*வேலூரில் இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்*
---------------------
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த கோருதல் 21 மாத கால நிலுவைத் தொகை முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர், சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம ஊதவியாளர்கள் ஊர்பற நூலகர்கள் உள்ளிட்ட 3.5 இலட்சம் ஊழிகளுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க கோருதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி வேலூர் மாவட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட உரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ட்டி.,.டி.ஜோஷி, தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பா.வேலு வரவேற்று பேசினார். தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் அ.சேகர், மற்றும் நிர்வாகிகள் பா.தீனதயாளன், எழில், இளந்தமிழன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வேளாண்மை துறை, மருத்துவமனை, வணிகவரித்துறை, அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் உள்ளிட்ட 20 அலுவலகங்கள் முன்பாக தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்
1. பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment