உன் வாழ்க்கை உன் கையில்

29.9.2024 ஞாயிற்றுக்கிழமை

அன்பான காலை வணக்கம்

இன்றைய சிந்தனை

:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:
உன் வாழ்க்கை உன் கையில்!
:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:.:

வெற்றி பெறுவது என்பது அனைவருக்கும் பிடித்தமான விடயம். சரி வெற்றி பெற என்னென செய்ய வேண்டும்? தொடர்ந்து காண்போம்..

நம் அனைவருக்கும் நன்கு பரிச்சயமான கதைதான் வினாயகப் பெருமான் ஞானப்பழம் பெற்ற கதை. 
உலகை யார் முதலில் சுற்றி வருகிறாரோ அவருகே பழம் என்ற அம்மையப்பர் கட்டளையின் அடிப்படையில் முருகப் பெருமான் மயிலேறி ஊர் சுற்றக் கிளம்ப வினாயகரோ சற்றும் யோசிக்காமல் 'அம்மையப்பரே உலகம்' என்று கூறி அவர்களைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

விநாயகரை வெற்றி கொண்டு உலகைச் சுற்றி வந்து பழம் வெல்வேன் என்று வேகத்துடன் கிளம்பிய முருகனுக்கோ ஏமாற்றமே மிஞ்சியது. 
அண்ணனோ தம்பியைப் பின் தொடர்ந்து சென்று அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்று வரிந்து கட்டாமல் வேறு வழி யோசித்ததன் பலன் -பழத்தைக் கைப்பற்றினார் விநாயகர். நிச்சயமாக  முருகனை வெற்றிகொள்ள நினைக்கவில்லை! மாறாக முருகன்தான் அண்ணனை வெற்றிகொள்ள வேண்டும் என்ற வேகத்தில் கிளம்பினார்.

எனவே நாம் வெற்றி பெற அடுத்தவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்பது தெளிவாக நமக்கு புலப்படும். அப்படியென்றால் நாம் ஏன் நமது குறிக்கோளை அடுத்தவருடைய குறிக்கோளுடன் ஒப்பிட்டு நமது வெற்றியை முடிவெடுக்க வேண்டும்?

"நமக்கு நாமே வெற்றி இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதை அடைவதும் அடுத்த முறை நம்முடைய சாதனையை நாமே உடைத்து மீண்டுமொரு வெற்றியை அடைவதுதான் உண்மையான சாதனை".

சரி நம் வெற்றியை அடுத்தவருடைய வெற்றியோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்பதற்கான என்னவென்று தெரியுமா?
ஏனெனில் ஒருவரது வெற்றியானது அவரவர்களுடைய பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு அமைவதே காரணமாகும். அந்த காரணிகள் என்னென்னவென்று காண்போம்.

1. குடும்பச்சூழல்,

2. கல்விநிலை,

3. நண்பர்கள்,

4. வளர்ப்பு முறை,

5. வெற்றியை அடைய அவர் முயற்சிக்க ஆரம்பித்த காலகட்டம்,

6. ஆலோசனைகள்,

7. குடும்பப் பண்புக் கூறுகள் போன்றவை.

இப்படியான பல்வேறு காரணிகளின் மூலம் ஒருவரை போல் மற்றவர் கண்டிப்பாக இருக்க முடியாது என்பதை உணர்கிறீர்கள் அல்லவா?

அதே போல் நீங்கள் அடுத்தவரை வெற்றி கொள்ள நினையாத போது ஏற்படும் நன்மைகள் என்னென்னவென்று பார்க்கும் போது, 

1. அனைவரும் நண்பர்களாவர்கள்,

2. நம்மை பற்றிய நல்லெண்ணம் உருவாகும்,

3. குழுவாக செயல்படும் வாய்ப்பு கிட்டும்,

4. எல்லாவற்றிற்கும் மேலாக மனமகிழ்ச்சி, மனத்தெளிவு,இனிமையான பேச்சு, நேர்மறை எண்ணங்கள், நிம்மதி என்று இன்னும் பல அனுபவங்கள் அனுபவத்தினால் உங்களுக்கு உருவாகும். எந்தவொரு செயலை செய்யும் போதும் அதற்கான அளவுகோலை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

ஒன்று முடிய மற்றது என உங்களை எப்போதும் உயர்த்தக்கூடிய வேலைகளிலேயே நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது உங்கள் வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் உங்களது தோல்வி கூட உங்களை பாதிக்காது.

உங்களை முன்னேற்ற மட்டுமே யோசிக்க வைக்கும். ஏனெனில் உங்கள் வெற்றிக்கு நீங்களே அளவுகோல்.. எனவே உங்களுக்கு எது பிடிக்கிறது..எது உங்களுக்கு சரியான தேர்வு என்பதை தெளிவாக தேர்ந்தெடுங்கள். உங்கள் தெரிவுகளையோ, முடிவுகளையோ கூட பிறரோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பிறகென்ன..

 "உன் வாழ்க்கை உன் கையில்..."

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளமுடன்..!

அன்பே சிவம்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை