VIT அறிவுசார் விழா

வேலூர்      27-9-24

இளைஞர்கள் வரும் காலம் செயற்கை நுன்னறிவு காலம் எதிர்காலமும் அது தான் என்பதை உணர்ந்து தங்களின் தனித்திறனை வளர்த்துகொள்ள வேண்டும்  -  நாட்டின் தொழில் வளர்ச்சியும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது எதிர்காலத்தில் செயற்கை நுன்னறிவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் - வேலூர் வி.ஐடி பல்கலைக்கழகத்தில் அறிவுசார் திருவிழாவில் டேனியலி  இந்தியா லிமிடெட் நிறுவனங்களின் துணதலைவர் மனோரஞ்சன் ராம் பேச்சு - 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த  625 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 27  ஆயிரம்          மாணவ,மாணவிகள் பங்கேற்பு - 200 புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது 
__________________________________________________________________________________________ 
       வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் (வி.ஐடி ) கிராவிட்டாஸ் எனப்படும் அறிவுசார் திருவிழாவானது நடந்தது இதனை வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வேந்தர் விசுவநாதன்  ட்ரோன் ரோபோவை பறக்கவிட்டு துவங்கி வைத்தார் இவ்விழாவில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர்கள் செல்வம்,சங்கர் ,ஆட்டோ டெஸ்க் நிறுவனத்தின் கல்வி மேலாளர் ஆனந்த் புஜாரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக டேனியலி இந்தியா லிமிடெட் நிறுவன துணைதலைவர்  மனோரஞ்சன் ராம் பங்கேற்று மாணவ,மாணவிகளின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார் இதில் ரோபோக்கள் கார்கள் ,பேட்டரி வாகனங்கள் , சிறிய ரக விமானங்கள் , ஆகியவைகளூம் 200-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளூம்35 பெரிய கண்டுபிடிப்புகள்  அறிவியல் சார்ந்த விவாதங்கள் லேசர் ஷோக்கள்,ரோபோ சண்டைகள் கருத்தரங்குகளூம் நடக்கிறது இந்த கிராவிட்டாஸ் எனப்படும் அறிவுசார் திருவிழா இன்று துவங்கி 29 ஆம் தேதி வரையில் நடக்கிறதுஇதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 625 கல்லூரி பல்கலைக்கழகங்கள் சேர்ந்த 27 ஆயிரம் மாணவ,மாணவிகள் இந்த அறிவுசார் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர் 

    இவ்விழாவில் டேனியலி இந்தியா லிமிடெட் நிறுவன துணை தலைவர் மனோரஞ்சன் ராம் பேசுகையில் கடந்த 30 ஆண்டுகளை காட்டிலும் நாடு இரும்பு உற்பத்தி புதிய தொழிற்சாலைகள் வேலைவாய்ப்புகளில் முன்னேற்றமடைந்துள்ளது ஆனால் இப்போது மாணவ,மாணவிகளாகிய நீங்கள் உங்களின் தனித்திறனை வளர்த்துகொள்வது அவசியம் காரணம் வரும் காலமானாலும் சரி எதிர்காலமானலும் சரி அது .ஏ.ஐ எனப்படும்.ஆர்டிபிஷியல் இண்டலிஜெண்ட் எனப்படும் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பம் தான் நீங்கள் அதிலும் கவணம் செலுத்தி அதி நவீன தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொண்டால் நாடும் முன்னேற்றமடையும் என பேசினார்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை