கோவில்
தந்தைக்கு
கோவில் கட்டி வணங்கும்
சமூக சேவகர் மணிமாறன்
திருவண்ணாமலை; செ.2
அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அன்னை ,தந்தைக்கு மற்ற உறவுகள் ஈடாகாது என்பது
நம் முன்னோர் வாக்கு. ஆனால் இன்றைய காலகட்டம் முற்றிலும் மாறிவிட்டது. பெற்றெடுத்த தாய்+ தந்தையை அருகில் வைத்து பார்க்க மனமில்லாமல் முதியோர் இல்லங்களில் சேர்த்து விடும் அவலம் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும்
அரங்கேறி வருகிறது.
இந்த கடினமான காலகட்டத்திலும் தாய் தந்தையின் மீது அன்பு கொண்ட மகன்களும் இருக்க தான் செய்கிறார்கள். அதற்கு உதாரணமாக ஒரு இளைஞர், மறைந்த தனது தந்தைக்கு சிவாலயம் அமைத்து வழிபட்டு வருகிறார். அது பற்றிய விவரங்களை காண்போமா!
திருவண்ணாமலை மாவட்டத்தில் தலையாம் பள்ளம் என்ற கிராமம் உள்ளது .இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். அங்குள்ள ஒரு விவசாய குடும்பத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு மகனாக பிறந்தார் பாண்டுரெங்கன்.
3.4 1955 ஆம் ஆண்டு பிறந்த பாண்டுரெங்கன். அவர் வசித்த கிராமத்தில் நிலம் வாங்கி விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்தார். உரிய வயதில் ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு
11 ஆண்டுகளாக குழந்தைகள் பிறக்கவில்லை. அதன் பின்னர் இறையருளால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன. கலைவாணி. லோகநாதன் ஆகியோர் பிறந்த பின்னர் மூன்றாவது குழந்தையாக மணிமாறன் பிறந்தார்.
நாட்டுக்கொரு மகன் வீட்டுக்கொரு மகன் என்று பேசி வந்த பாண்டுரெங்கன். இளைய மகன் மணிமாறனிடம் அன்னை தெரேசா தொண்டுகள் பற்றி தெரிவித்தார் அவர் பற்றிய நூலையும் படிக்க கொடுத்தார். ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருந்த மணிமாறனுக்கு அதற்கு மேல் படிப்பில் நாட்டம் இல்லை. தந்தை சொன்னது போல் சமூக சேவையில் ஈடுபட முடிவு செய்தார். தனது 16 +வது வயதில் சமூக சேவையில் ஆர்வமுடன் ஈடுபட தொடங்கினார். முதியோர்கள் ,தொழு நோயாளிகளுக்கு உதவிகள் செய்து வந்த மணிமாறன் ஆதரவற்ற முதியவர்களின் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்யும் பெரும்பணியை மிகவும் கவனமுடன் செய்து வந்தார்.
மறைந்தவரின் உறவினர் போல் அவர் அனைத்து இறுதிக் கடன்களையும் செய்து நல்லடக்கம் செய்தார்.
இது பற்றி அறிந்த முதியோர்கள் சாமியார்கள் தாங்கள் இறந்தபின் நீங்கள் தான் எங்கள் உடல்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று மணிமாறினம் கேட்டுக் கொள்வார்கள். இந்தப் பணி ஒரு சவாலானதாக இருந்த போதிலும் மணிமாறன்
மன தைரியத்துடன் இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார். அவர் இந்த பணியை செய்ய முக்கிய காரணம் அவரது தந்தை பாண்டுரெங்கம் தான் என்றால் மிகையாகாது.
மகன் திருமண வயது எட்டிய போதும் ,
16 ஆண்டுகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட
போதும் அதற்கு பாண்டுரெங்கன் தடை ஏதும் செய்யாமல் உன் விருப்பம் போல் நடந்து கொள் என்று கூறிவிட்டார். காசியில் அகோரிகளுடன் தங்கி அவர்களில் ஒருவரை குருவாகவும் ஏற்றுக் கொண்ட மணிமாறன் குருவின் சொல்படி அனைத்தையும் செய்தார். அவர் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் சென்று ஆதரவற்றோர்கள் உடல்களை பெற்று நல்லடக்கம் செய்து வருகிறார்.இதுவரை
2,955 ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளார்.
தன்னலமற்ற பணிக்காக சமூக சேவகர் மணிமாறன் உலக அளவில் விருதுகளை பெற்றுள்ளார். அவரது சேவையைப் பற்றி அறிந்த ஜனாதிபதி
அப்துல் கலாம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பாராட்டு தெரிவித்து அவரை ஊக்கப்படுத்தி உள்ளனர்.
பல்வேறு
விருதுகளை பெற்ற போதிலும் மணிமாறன் எப்போதும் ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியில் இருப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார் .அவருக்கு நல்லிதயம் கொண்ட பலர் உதவிகள் வருகின்றனர்.
இந்த சமூக சேவை காரணமாக அவர் எந்த தொழிலிலும் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து மணிமாறனுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
இரவு பகலாக சமூக சேவையில் ஈடுபட்டு சில நேரம் தன் உடல் நலம் பாதிக்கப்பட்ட போதிலும் அதனைப் பற்றி கவலைப்படாமல் மணிமாறன் சேவையை தன் கடமையாக செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8.7.2024 அன்று பாண்டுரெங்கன் தனது மகன் மணிமாறன் மார்பில் சாய்ந்திருக்கும் போதே இயற்கை எய்திவிட்டார். பாசமிக்க தந்தையாக, வழிகாட்டும் ஆசானாக விளங்கியவர் திடீரென ஜோதியாகிவிட்டதால் மணிமாறன் மிகவும் கலங்கிவிட்டார். இருந்தபோதிலும் இயற்கைக்கு எவரும் விதிவிலக்கு அல்ல என்பதால் அதனை ஏற்றுக் கொண்டார். தனக்கு எல்லா வகையிலும் உதவிகரமாக இருந்த தந்தையின் வழிகாட்டுதல் எப்போதும் வேண்டும் என்பதால் அவர் நினைவாக ஒரு சிவாலயம் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி பாண்டுரெங்கன் விவசாயம் செய்து வந்த நிலத்தில் அவரது அஸ்தியை வைத்து சிவாலயம் கட்ட ஏற்பாடு செய்தார். அதற்காக காசியில் இருந்து சிவலிங்கம் எடுத்து வரச் செய்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து கோவிலையும் கட்டி முடித்து விட்டார். இந்தக் கோவிலில் இன்று அமாவாசை 48வது (2 .9 .24 )சிறப்பு ஹோமங்கள் செய்து சிவாலயத்தை வழிபாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தாக நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் தாயார் கண்மணி கலந்துகொண்டு தந்தைக்கு சிவாலயம் கட்டி வழிபாட்டுக்கு கொண்டு வந்த சமூக சேவகர் மணிமாறனுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது
5 கிராமங்களைச் சேர்ந்த 500 பேருக்கு புத்தாடைகள் மற்றும் உதவிகள்
சமூக சேவகர் மணிமாறன் சார்பாக வழங்கப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட கிராம மக்கள் மணிமாறனின் தந்தை பாசத்தை பாராட்டினர்.
National Awardee Dr.P.Manimaran
WORLD PEOPLE SERVICE CENTRE, Reg.No.279/09
No.298, Nadu Street, ThalayamPallam Village,
Nariyapattu Post, Thiruvannamalai District,
Tamil Nadu, Mobile: 09944818831 8778415911
Web: www.worldpeopleservicecentre.org
Mail: socialservicemanimaran86@gmail.com
Comments
Post a Comment