போட்டி
வேலூரில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
___________________________________
வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டரங்கில் தமிழ்நாடு சிலம்பம் சங்கமும் மாவட்ட சிலம்பம் சங்கமும் இணைந்து மாநில அளவிலான சிலம்பம் போட்டிகளை அகில சிலம்பம் சங்க தலைவர் சந்தோஷ்குமார் துவங்கி வைத்தார் இதில் தமிழகத்திலுள்ள 28 மாவட்டங்களை சேர்ந்த முதலிடம் வென்றவர்கள் மட்டும் இப்போட்டிகளில் கலந்துகொண்டனர் 6 வயது முதல் 19 வயது வரையில் 14 பிரிவுகளாக ஆண்கள் பெண்கள் தனித்தனி பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது இதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கேற்பார்கள் மாணவர்கள் தங்களின் பாரம்பரிய சிலம்பக்கலைகளையும் செய்து காட்டினார்கள் இதில் கோப்பைகளும் வழங்கப்பட்டது இவ்விழாவில் பயிற்சியாளர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
'
Comments
Post a Comment