விழா
வேலூர்
மாணவிகள் கைபேசியை விடுத்து கல்விக்கும் அவர்களுக்கான முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் டி.கே.எம் கல்லூரியில் பட்டங்களை வழங்கி பேச்சு
__________________________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவானது கல்லூரியின் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் பானுமதி உள்ளிட்டோரும் திரளான மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் கலந்துகொண்டு 1137 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் இதில் தரவரிசை பெற்ற 93 மாணவிகள் ரூ.2. 19 லட்சம் மதிப்பில் பண பரிசுகளும் வழங்கப்பட்டது
இவ்விழாவில் வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் மலர் பேசுகையில் மகளிர்கள் இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக கல்வி கற்க காரணமே தந்தை பெரியார் தான் நீங்கள் இங்கு உயர் கல்விக்கு வந்து பட்டங்களை பெற அவர் தான் காரணம் மாணவிகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அது மட்டுமே உங்களை முன்னேற்றும் கைபேசியை விடுத்து கல்வியில் ஆர்வம் செலுத்துங்கள் பாரதி கண்ட பெண்ணாக வாழ்ந்திடுங்கள் என பேசினார்
Comments
Post a Comment