லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
லட்சக்கணக்கான பக்தர்கள்
கிரிவலம்
வேலுார்: டிச 14–
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் கார்த்திகை தீபம் திருவிழா கடந்த 4 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று (13) காலை 4:00 மணிக்கு கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு கோவிலுக்கு பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று நீண்ட கியூ வரிசையில் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர். எந்த தேதியில் கிரிவலம் சென்றாலும் சிவனின் அருள் கிடைக்கும் என்பதால் 365 நாளும் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
பெளர்ணமியன்று கிரிவலம் செல்வதால் முக்தி கிடைக்கும் என்பதால் அன்றைய தினம் தான் அதிகளவு பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
பெளர்ணமி அன்று சந்திரன் பூமியை நெருங்கி வருகிறது. அப்போது நிலவின் ஒளிக்கதிர்கள் அண்ணாமலையில் பட்டு எதிரொலிக்கும் போது, கிரிவலம் வரும் பக்தர்கள் மீது சந்திரனின் ஒளி படும். இதனால் மன அமைதி ஏற்படும், கவலைகள் தீரும், வியாதிகள் போகும் என்ற நம்பிக்கை உள்ளது. பெளர்ணமி அன்று தேவர்கள், சித்தர்கள் கிரிவலம் செல்வதால் அவர்கள் ஆசி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு கார்த்திகை பெளர்ணமி இன்று (14) மாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (15 ) மாலை 3. 13 மணிக்கு முடிகிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகம், ஆந்திரா மாநிலம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
GOOD
ReplyDelete