அழகு

15.12.2024 ஞாயிற்றுகிழமை 

இனிய காலை வணக்கம் 

இன்றைய சிந்தனை

……………………………………..
         "அழகு என்பது"
...........................…………….

ஒரு அழகான பெண், ஒரு விமானத்தில் ஏறினார்.. தனது இருக்கையைத் தேடிச் சென்ற போது. தனக்கு ஒதுக்கிய இருக்கைக்கு  அடுத்த இருக்கையில்  இண்டு கையையும் இழந்த ஒருவர் அமர்ந்து இருந்தார்..

அவரைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்கு ஒரு மாதிரியா அசூசையா இருந்தது. இந்த ஆள் பக்கத்தில நாம் எப்படி உட்கார்ந்து பல மணி நேரம் பயணம் செய்வது? என்று  தயங்கிய அந்தப் பெண்.,

விமானப் பணிப்பெண்ணைக் கூப்பிட்டு,,

 "எனக்கு வேற இடத்தில இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் .எனக் கேட்டார்.அதுக்கு விமானப் பணிப்பெண், "ஏன் உங்களுக்குத் தான் இருக்கை ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறதே" என்றார்.

அதற்கு அந்தப் பெண், "எனக்கு அவர் பக்கத்தில உட்கார்ந்து பயணிக்க அருவருப்பா இருக்கிறது...
அதனால் தான் வேறு இருக்கை கேட்டேன் என்றார்..

விமானப் பணிப்பெண்ணுக்குத் தூக்கி வாரிப் போட்டது.
பார்ப்பதற்கு நல்லப் படித்தவர் போல இருக்காங்க. 

ஆனா கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாம பேசுறாங்களே என்று எண்ணி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்.,கொஞ்ச நேரம் இருங்க மேடம், நான் போய் வேறு இருக்கை இருக்கின்றாதா? என்று பார்த்து வருகிறேன் என்று சொல்லிச் சென்றார்..

சிறிது நேரம் கழித்து வந்து,

'' மன்னிக்கவும், மேடம், வேறு எங்கும் இருக்கை இல்லை .. எதற்கும் நான் கேப்டனிடம்  பேசி உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய முடியுமான்னு கேட்டு வரேன்..

அதுவரை பொறுத்து இருங்க... ப்ளீஸ்"ன்னு சொல்லிட்டுக் கேப்டன் அறைக்குச் சென்றார். 

கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, ''மேடம், நீங்க எடுத்து இருக்கிற டிக்கெட் எக்கானமிக் கிளாஸ்... ஆனால் எக்கானமி க்ளாசில் உங்களுக்கு ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை. 

முதல் வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு இருக்கை காலியாக இருக்கு. 

ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்தப் பிரயாணி. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காமல் நாங்கள் இருக்க முடியாது. 

அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்கப் போகின்றோம். 

கொஞ்சம் பொறுங்க"ன்னு சொன்னதும் அந்தப் பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை... 

விமானப் பணிப்பெண்ணின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல், முதல் வகுப்புக்குப் போகத் தயாரானாங்க..

ஆனா அங்க நடந்ததது வேறு. விமானப் பணிப்பெண் நேராக அந்த இரண்டு கைகளையும் இழந்தவரிடம் சென்று,

,"சார் தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.
உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வருகிறேன்.

நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார், உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உட்கார வைக்க எங்களுக்கு மனமில்லை"ன்னு பணிவாகச் சொன்னதும்,

விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்ற்றார்கள்..

அந்தக் கைகளை இழந்தவர் எழுந்து,

"நான் ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி மேன். போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்து விட்டேன்..

முதல்முறையாக இந்தப் பெண் சொன்னதைக் கேட்டதும், இவர்களைப் போல உள்ளவர்களுக்காகவா,இரவு என்றும் பகல் என்றும் பாராமல் பல இன்னல்களுக்கு இடையில் போரில் ஈடுபட்டோம் என்று நினைத்து மிக வருத்தமாக இருந்தது.. 

ஆனால், இப்போது நீங்கள் எல்லாரும் கைதட்டி ஆராவாரம் செய்வதைப் பார்த்த போது மனசுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது..

மற்றும் உங்களைப் போன்ற நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொல்லியபடி, முதல் வகுப்பை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.. 

அந்தப் பெண்மணியோ அவமானத்தின் உச்சிக்கே போய் விட்டார்.... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையைக் குனிந்து உட்கார்ந்து விட்டார்......

ஆம்.,நண்பர்களே..

''அழகு'' என்பது நாம பார்க்கின்ற வெளித்தோற்றத்தில் இல்லை. அது மனசு சம்பந்தப்பட்டது..

அது நம் நடத்தையில் தான் வெளிப்படும்... 

அதை உணர்ந்து நடப்பதற்கு முயற்சி செய்வோம்.

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க வளமுடன்..!

அன்பே சிவம்

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்