ஆய்வு

*தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்!*

தூத்துக்குடியில் தொடர் கனமழையால் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், எப்.சி.ஐ குடோன் பகுதி, P&T காலனி, ராஜீவ் நகர், தெரேஸ்புரம் ஆகிய பகுதிகளில்  திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேங்கியுள்ள வெள்ள நீரைப் பார்வையிட்டு, வெள்ள நீரை வெளியேற்றும் பணியைத் துரிதப்படுத்தினார். மேலும், அப்பகுதியிலிருந்த பொதுமக்களுடன் உரையாடி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார் 

எப்.சி.ஐ குடோன்  பகுதியில் ஆய்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகக் கனிமொழி கருணாநிதியைத் தொடர்புகொண்டு உரையாற்றினார். பல இடங்களில் மழை வெள்ளத்தைப் பார்வையிட்டு உள்ளேன். தற்போது இங்கு மழை பெய்யவில்லை வெயில் அடிக்கிறது. தூத்துக்குடி முடித்துவிட்டு, ஏரல் சென்று அங்கு மழை வெள்ளத்தைப் பார்வையிட உள்ளேன் என்று கூறினார்.

இந்த ஆய்வின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்