சிம்ம குளம் திறப்பு
வேலூர் 15-12-24
விரிஞ்சிபுரத்தில் கடைஞாயிறை முன்னிட்டு நள்ளிரவில் 12 மணிக்கு சிம்ம குளத்தில் குளித்து ஈரத்துணியுடன் கோவிலினுள் படுத்து உறங்கி நூதன வேண்டுதல் மற்றும் நேர்த்திகடன்
____________________________________________
வேலூர்மாவட்டம்,விரிஞ்சிபுரத்தில் மார்கபந்தீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்று கிழமை முன்னிட்டு கடை ஞாயிறு விழாவானது நடைபெற்றது இதில் ஆலயத்தினுள் உள்ள சிம்மகுளத்தில் நள்ளிரவு 12 மணிக்கு குளித்து கோவில் உட்பிரகாரத்தில் ஈரத்துணியுடன் கையில் எலுமிச்சைபழம் வெற்றிலை பாக்கு,போன்றவற்றுடன் படுத்து உறங்கினால் வேண்டுதல் நிறைவேறுவதாக பொதுமக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையில்லாத பெண்கள் திருமண தடை உள்ளவர்கள் ஆலயத்தில் படுத்து ஈரத்துடன் உறங்கி நேர்த்திகடனை நிறைவேற்றினார்கள் இதில் தமிழக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர் இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ,ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்,மாவட்ட ஊராட்சிதலைவர் பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்
Comments
Post a Comment