செய்திகள்
வேலூர்
காட்பாடி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கைதுஐந்து லட்சம் மதிப்புள்ள 6 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல்
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக காட்பாடி காவல் துறைக்கு புகார்கள் வந்தன புகாரின் அடிப்படையில் போலீசார் இருசக்கர வாகன திருடி வரும் நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.இந்த நிலையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் ரயில்வே கேட் பகுதியில் வாகன தணிகையில் ஈடுபட்டு வந்தன அப்போது கசம் பகுதியில் இருந்து காட்பாடி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.இதனை அடுத்து காட்பாடி காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அந்த வாலிபர்காட்பாடி அடுத்த கரிகிரி தேரடி தெரு பகுதியை சேர்ந்த கரிகிரி முருகன் (வயது-38) என்பதும் அவர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது.மேலும் அவரது வீட்டின் பின்புறத்தில் திருடி பதுக்கி வைத்திருந்த 6 இருச்சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட ஆறு இருசக்கர வாகனங்களின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட கருகிரி முருகன் மீது வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழிப்பறி ஆள் கடத்தல் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் இவர் சரித்திர பதிவெடு குற்றவாளி எனவும் போலீசார் தெரிவித்தனர்.
வேலூர்
திமுகவை யார் பழித்து பேசினாலும் அவர்களுக்குள் குடும்பச் சண்டை வரும் அடிதடி நடக்கும் திமுக ஒரு வித்தியாசமான கட்சிதிமுகவை கேவலப்படுத்தலாம் என ஏதேதோ சதி செய்கிறார்கள்
எங்கு எது நடந்தாலும் அதை திமுக மீது பழி போடுகிறார்கள் குடியாத்தம் பொதுக்கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேச்சு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
அப்போது பேசிய அவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும் ஸ்டாலினை போய் நான் சந்திப்பதா எனக்கு அவமானமாக உள்ளது என ஒருவர் கூறினார் இன்று அவர்களைப் பார்த்து சந்தி சிரிக்கிறது திமுக மோசமான கட்சி திமுகவை பற்றி யார் பேசினாலும் குடும்பத்தில் கலவரம் வரும் அடிதடி நடக்கும் ஒரு மாதிரியான வித்தியாசமான கட்சி திமுக திமுகவை பழித்து பேசாதீர்கள்திமுகவை கேவலப்படுத்தலாம் என ஏதேதோ சதி செய்கிறார்கள் எங்கு எது நடந்தாலும் அதை திமுக மீது பழி போடுகிறார்கள் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கேள்விப்பட்டு முதல்வர் துடிதுடித்து போய்விட்டார் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்எடப்பாடி போராட்டம் நடத்துகிறார் என்றால் அவருக்கு என்ன யோகிதை உள்ளது பொள்ளாச்சி சம்பவம் அனைவரும் அறிந்ததே அப்போது நடவடிக்கை எடுத்தாரா எடப்பாடி ஆனால் உடனடியாக முதல்வர் 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தார் ஒருவர் லண்டனில் இருந்து படித்து வந்திருக்கிறார் எல்லாருக்கும் மண்டையில் மூளை இருக்கும் அவருக்கு உடம்பெல்லாம் மூளையாக உள்ளது என்ன நடந்தது என்று மக்களுக்கு சொல்லணும்அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிக்கவில்லை துணைவேந்தர் தான் பதிவாளர் நியமிக்க வேண்டும் அவர்தான் மற்ற அனைத்தையும் பார்க்க வேண்டும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் ரோந்து வாகனம் வந்து கொண்டிருக்க வேண்டும் ஆனால் இப்பொழுது ரோந்து வாகனமே இல்லை காரணம் காவல்துறையும் உள்ளே போக முடியாது பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் காவலர்கள் உள்ளே செல்ல முடியாது. ஊழல்தான் நடக்கிறது துணைவேந்தரை கவர்னர் நியமிக்கவில்லை
நாங்கள் அறிக்கை விட்ட பின்பு கவர்னர் தற்போது போய் அங்கு பார்க்கிறார் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கவில்லை இந்த ஆட்சிக்கு எப்படியாவது கெட்ட பெயர் உருவாக்க வேண்டும் என திட்டமிட்டு ஒரு சதி கூட்டம் நடந்து கொண்டுள்ளது
என ஆர்.எஸ்.பாரதி பேசினார்
வேலூர்
வேலூரில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு வேலூர் பழைய மாநகராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து வழிபாடு
_________________
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள பழையமாநகராட்சி மண்டல அலுவலகத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் தவம் புரிந்த இடமான யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ யோக ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து செந்தூர காப்பு அலங்காரங்களை செய்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனைகள் நடைபெற்றது இதில் துணை மேயர் சுனில் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்
[ ராணிப்பேட்டைமாவட்டம்
சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலய நுழைவாயிலில் உள்ள அனுமனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களை செய்து திரளான பக்தர்கள் சுவாமிதரிசனம் திருப்பாவை திருவென்பாவை பாடற்களும் பாடப்பட்டது
ராணிப்பேட்டைமாவட்டம்,108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு பிரம்ம தீர்த்தம் என்னும் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ள 32 அடி உயர அனுமன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து துளசி மாலை வட மாலை, மலர் மாலை ,வெற்றிலை மாலை அணிவித்து அலங்கார தோரணை செய்து மகாதீபாரனைகள் நடைபெற்றது. இதில் 30 க்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு பிரம்ம தீர்த்த குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி தங்கள் நேரத்தில் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மேலும் சிறுவர்கள் திருப்பாவை திருவென்பாவை பாடல்களையும் பாடினார்கள்
வேலூர்
வேலூரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாததால் முதல்வர் பதவி விலக கோரியும் அதிமுகவினர் தடையை மீறி ஆர்பாட்டம் போலீசார் அதிமுகவினரிடையே தள்ளு முள்ளு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுகட்டாக கைது
________________________________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும் திமுக அரசும் முதல்வரும் பதவி விலக கோரியும் புகார் அளித்த மாணவியின் பெயர் கொண்ட எப்.ஐ.ஆர் வெளியிட்டவர்கள் மீது சட்டபடியான கடுமையான நடவடிக்கையை எடுக்க கோரி தடையை மீறி அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் அதிமுக பொருளாளர் மூர்த்தி மற்றும் சிவாஜி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பல்வேறு கோஷங்களை எழுப்பும் முன்னரே காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டதால் ஒருவர் காவல்துறை வாகனத்தின் சக்கரத்தின் முன் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் திமுக அரசையும் முதல்வரையும் கண்டித்து கோஷங்களை எழுப்பி மாவட்ட செயலாளர் அப்பு செயலாளர் செய்தியாளர்களிடம் பாலியல் வன் கொடுமையால் மாணவி பாதிக்கப்பட்டது குறித்து கூறிகொண்டிருக்கும் போதே வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டதால் அதிமுகவினர் காவல்துறையினரிடையே தள்ளு முள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது இதன் பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கைது தனியார் மண்டபத்தில் அடைத்தனர்
ராணிப்பேட்டைமாவட்டம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் அனைவரும் கைது
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் தொடர் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் அதன்படி அதிமுக சார்பாக மாணவியின் பாலியல் வன்கொடுமை கண்டிக்கும் விதமாக தமிழக முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுத்திருந்தார்..
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் அதிமுக மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சட்ட ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட தவறிய தமிழக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தபோது போலீசார் அனைவருமே குண்டு கட்டாக கைது செய்து வாகனங்களில் கொண்டு சென்றனர்..
திருப்பத்தூர்மாவட்டம்
வாணியம்பாடியில் தென்றல் ஏஜென்சி கடை மற்றும் குடோன் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த தென்றல் தமிழ் என்பவருக்கு சொந்தமான தென்றல் ஏஜென்சி கடை மற்றும் குடோன் வைத்து சிமெண்ட் மற்றும் கம்பிகள் விற்பனை செய்து வருகிறார், நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற போது, இரவு குடோனின் பின்பக்கம் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உள்ள வைக்கப்பட்டிருந்த 5.45 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றுள்ளார், வழக்கம்போல் கடை உரிமையாளர் இன்று கடைக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பின்பு உடனடியாக இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாணியம்பாடி நகர காவல் துறையினர் சம்பவத்தைக் குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்மாவட்டம்
திருப்பத்தூரில் தடையை மீறி அதிமுக கண்டன ஆர்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில்சென்னை அண்ணா பல்கலை கல்லூரி மாணவிக்கு பாலியல் வன் கொடுமை தமிழகத்தில் கஞ்சா, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு துணை போகும் விடியா திமுக அரசை கண்டித்து கண்டண ஆர்பாட்டம் நடைப்பெற இருந்தது.இதனையடுத்து போலீசார் கண்டன ஆர்பாட்டத்திற்கு அனுமதி தர மறுத்தனர்.இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி தலைமையில் அதிமுகவினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணிதிமுக எதிர்கட்சியாக இருந்த போது முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டன ஆர்பாட்டங்களில் ஈடுப்பட்டதாகவும்தற்போது அதிமுகவின் ஆர்பாட்டங்கள் மக்களுக்காக நடைப்பெற்று வரும் நிலையில் போலீசாரை கொண்டு ஒடுக்கி வருகின்றனர்.எனவே சென்னை அண்ணா பல்கலை கல்லூரி மாணவியின் பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட அந்த சார் யார் என்பதை தெரியும் வரை அதிமுகவின் போராட்டம் ஓயாது என பேசினார்.பின்னர் பேசி கொண்டு இருந்த போதே காவல் துறையினர் மைக்கை ஆப் செய்து வலுக்கட்டாயமாக கைது செய்ததாதல் போலீசாரின் அராஜகத்தையும், திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி, வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உட்பட திரளானோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர்.
வேலூர்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திமுக பிரமுகரால் மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் அதிமுகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா, அண்ணா பல்கலைக்கழகம் படித்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக பிரமுகர் ஞானசேகரன் கைது செய்ததை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் பாலியல் வன்கொடுமை செய்த மாணவிக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அதிமுக கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவரும் நிலையில் பள்ளிகொண்டா பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட செயலாளர் மேலழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்ததை தொடர்ந்து நடத்த இருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சுமார் 300க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தில் அதிமுக கட்சியினர் ஒன்று சேர்ந்தனர். உடனடியாக காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யும் போது திமுக ஆட்சிக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் பள்ளிகொண்டா பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் பதட்டமான சூழ்நிலையும் ஏற்பட்டது.
திருப்பத்தூர்மாவட்டம்
வாணியம்பாடி அருகே தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளரின் செல்போனை பறித்துச்சென்ற இளைஞர்கள் 2 பேர் கைது, ஒருவர் தலைமறைவு, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம்.ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியை சேர்ந்தவர் முரளி, இவர் அதே பகுதியில் தோல் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில், இவர் கடந்த (26.12.2024) அன்று வாணியம்பாடியிற்கு சென்று காய்கறி வாங்கிக்கொண்டு பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, கிரிசமுத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்துள்ளார், அப்பொழுது அவ்வழியாக விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில், வந்த 3 இளைஞர்கள் முரளியின் செல்போனை கண் இமைக்கும் நேரத்தில், பறித்துச்சென்றுள்ளனர், பின்னர் இதுகுறித்து முரளி வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு வழிப்பறியில் ஈடுப்பட்ட இளைஞர்களை தேடி வந்த நிலையில்,வாணியம்பாடி பாரத் நகர் பகுதியை சேர்ந்த புலி (எ) அப்துல்ரபிக் மற்றும் பெரியபேட்டை பகுதியை சேர்ந்த அஜூஷ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்,
அதனை தொடர்ந்து செல்போனை உரிமையாளர் முரளியிடம் ஒப்படைத்து, தலைமறைவாக உள்ள மேலும் ஒரு இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..
திருப்பத்தூர்மாவட்டம்
திருப்பத்தூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் விழாவில் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு!
முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் கீழ் மாதம் ரூ.1000/- பெறுவதற்கான வங்கி பற்று அட்டை மாணவிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் புதுமை பென் விரிவாக்க திட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுபுதுமை பெண் விரிவாக்க திட்ட விழாவில்தமிழக அரசால் துவங்கப்பட்டு செயல்படுத்தி வருகிற புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் மேற்படிப்பு பயில்வதற்காகவும், மாணவிகள் பயன்படுத்தி கொள்ளவும் இத்திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 4.25 லட்சம் மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பத்தூர் தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கலந்துக்கொண்டனர் புதுமைப்பெண் திட்டத்தில் நம் மாவட்டத்தில் இதுவரையில் 2710 மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். தமிழக அரசால் மாணவிகள் எதிர்காலத்தை மனதில் வைத்து மாண்புமிகு முதல்வர் இந்த திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்கள். அதை மாணவிகள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்இந்த திட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மேல்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக உள்ளது
வேலூர்
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2000ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் வழங்கப்பட்ட பட்டாவை ஆன்லைனில் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் மாநில குழு உறுப்பினர் டெல்லி பாபு தலைமையில் குடியேறும் போராட்டம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொண்ட சமுத்திரம் பஞ்சாயத்து விநாயகபுரம் பகுதியில் உள்ள 32 வீட்டுமனை பட்டாக்கள் கடந்த 2000ம் ஆண்டு கலைஞர் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. அதனை இதுவரை ஆன்லைன் பதிவேட்டிலும் ஏற்றி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் போராட்டங்கள் நடத்தியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால். இன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினருமான டெல்லி பாபு தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து குடியாத்தம் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி மற்றும் குடியாத்தம் காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன் சமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பத்தூர்மாவட்டம்
ஆம்பூரில் பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஏ கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இன்று அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் கோ பூஜை கலச பூஜை யாக பூஜை செய்தனர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து சாமிக்கு பல்வேறு மூலிகைகள் மற்றும் பழங்கள் கொண்டு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர் அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயர் அருளை பெற்றனர்
Comments
Post a Comment