செய்திகள்

 திருப்பத்தூர்மாவட்டம்  

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் மீது  திருவள்ளூவர் உருவம் கொண்ட ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது 

திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ல் தொடங்கப்பட்டு தமிழ்நாடு அரசு குமரிக் கடலின் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது  133 அடி உயரச் சிலையை அமைத்தனர்.இந்தச் சிலை 2000 ஆண்டு ஜனவரி 1-ல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதற்கான ஆண்டு விழா நடத்தப் போவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளுவர் பலூன் பறக்க விடப்பட வேண்டும் என  வேண்டும் என அரசு உத்தரவிட்டதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு மாவட்ட நிர்வாகத்தால் ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பு பறக்கும் திருவள்ளுவரின் படம் பொறிக்கப்பட்ட ராட்சத  பலுனின்  காட்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்

  கண்ணமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் மீட்பு  அழைப்பு எண்.246/2024 வாழியூர் கூட்ரோடு அருகில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதாக 101கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் பெறப்பட்டு ஊர்தி குழுவினருடன் சென்று பொதுமக்கள் உதவியுடன் 3பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் இறந்த நிலையில் மீட்கப்பட்டது (இறந்தவர்.ஸீதர்.38, காயமடைந்தவர்கள். சங்கீதா.35,அஜய்16,அனுஷ்கா 14, நெல்வாய்,கணியம்பாடி) 

 ராணிப்பேட்டைமாவட்டம்  
 
ராணிப்பேட்டையில்  இருதய பாதுகாப்பு உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாராத்தான் ஓட்டத்தை கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி துவங்கி வைத்தார் 
________________________________________
     ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை பெல்   துணை நகரம்  அருகிலிருந்து இருதய பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாராத்தான் ஓட்டமானது நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் முதியவர்கள் பொதுமக்கள் அயல்நாட்டினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர் இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் 42 கிலோமீட்டர்,21 கிலோமீட்டர்,10 கிலோமீட்டர் ,5 கிலோ மீட்டர் தூரங்கள் என 4 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது இதில் பங்கேற்றவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று  இருதய பாதுகாப்பாக இருக்க உடல் பயிற்சி நடைபயிற்சி மாராத்தான் போன்றவைகள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவே இந்த மாராத்தான் ஓட்டமானது நடந்தது இதில் ராணிப்பேட்டை முதல்,- மகிமண்டலம் வரையில் 42 கிலோமீட்டர் தூரமும்,ராணிப்பேட்டை முதல் கல்புதூர் வரையில் 21 கிலோமீட்டர் தூரமும்,ராணிப்பேட்டை முதல் அக்ராவரம் வரையில் 10 கிலோமீட்டர் தூரமும்,ராணிப்பேட்டையிலிருந்து - முகுந்தராயபுரம் வரையில் 5 கிலோமீட்டர் தூரமுமாக இந்த மாராத்தன் ஓட்டம் நடத்தப்பட்டது ஆர்வமுடன் நூற்றுக்கணக்கானோர் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஓடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது '

வேலூர்      

தமிழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக நிரப்ப வேண்டும் டெண்டர் விட்டு தற்காலிக முறையில் பணியமர்த்த கூடாது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாநில பொதுகுழுவில் தீர்மானம் 
_____________________________________________
     வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம் அதன் கௌரவத்தலைவர் ராஜவேலு தலைமையில் நடைபெற்றது மாநில இணை செயலாளர் ஸ்ரீதர் மாநில பொருளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் இதில் பலதுறை சேர்ந்த ஊழியர்களும் கலந்துகொண்டனர்
      பின்னர் இந்த பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில கௌரவத்தலைவர் ராஜவேலு செய்தியாளர்களிடம் கூறுகையில் அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் வருங்கால வைப்பு நிதி முன்னர் செய்ததை போல் பிடித்தம் செய்ய வேண்டும் மாநில அரசு மத்திய அரசு அறிவிக்கும் போதே அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும் தமிழகம் முழுவதுமுள்ள 4 லட்ஸாம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் டெண்டர் விட்டு அதன் மூலம் தற்காலிகமாக பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும்  பேரூராட்சிகளில் தினக்கூலி பணியாளர்களுக்கு கூலி ரூ.600 ஆக வழங்க வேண்டும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இடங்களுக்கு இன்னும் வீட்டு வாடகை படி சி.சி.ஏவை வழங்க வேண்டும் புதியதாக  பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகளையும் அலுவலர்களையும் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும் தமிழகம் முழுவதுமுள்ள நகராட்சி மாநகராட்சி பேரூராட்சிகளில் நிரந்தர துப்புரவு பணியாளர்களை அரசே நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார் 

 வேலூர்      

 பள்ளிகளில் பாதை பூஜை செய்ய கூடாது என தமிழக அரசு விடுத்துள்ள சுற்றறிக்கையை உடனே திரும்ப பெற வேண்டும்  ஜனவரி புத்தாண்டு அன்று ஆகம விதிகளை மீறி நள்ளிரவில் கோவில்களை திறக்க கூடாது - பொது இடங்களில் மது கலாச்சார புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் வேலூரில் பேட்டி 
____________________________________
          வேலூர்மாவட்டம்,வேலூர் பேரிபக்காளி தெருவில் விஸ்வகர்மா சமுதாயத்தினருக்கு விஸ்வகர்மா சமுதாய கைவினை தொழில்கள் சலுகைகள் குறித்து கூட்டம் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத்தலைவர் அச்சுதன் தலைமையில் நடைபெற்றது இதில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டு மத்திய அரசு விஸ்வகர்மா மக்களுக்கு அளிக்கும் திட்டங்களை எடுத்து கூறினார் இதில் திரளானோர் பங்கேற்றனர் 
    பின்னர் இந்து மக்கள் கட்சியின்  மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில் பிரதமர் மோடி மத்திய அரசு அறிவித்த விஸ்வகர்மா கைவினைஞர்கள் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் செயல்படுத்தாமல் இருக்கிறது ஆனால் அந்த பெயரை கலைஞர் கைவினைஞர்கள் திட்டம் என பெயர்மாற்றம் செய்கிறார்க்ள் விஸ்வகர்மா என இடம் பெற வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் வரும் ஜனவரிம் ஒன்றாம் தேதி ஆகம விதிகளை மீறி நள்ளிரவு 12  மணிக்கு கோவில்களை திறந்து சிறப்பு வழிபாடு செய்ய கூடாது பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவிருந்துடன் கொண்டாடுவதை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் பலாத்காரம் குறித்து அதன் எப்.ஐ.ஆர் வெளியிட்ட காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனை வெளியிட்டதால் அந்த பெண்ணின் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது துணை முதல்வர் தான் கிறிஸ்தவர் என சொல்லிகொள்ளட்டும் சங்கிகள் வயிறு எரிவார்கள் என சொல்கிறார் ஆனால் துர்கா தான் வயிறு எரிவார் என்னையும் பாஜக தலைவர் அண்ணாமலையையும் திமுக ஐடி விங்க் தரக்குறைவாக இணையதளங்களில் வெளியிடுகிறது ஆனால் கருத்து சுதந்திரம் கூட இல்லாமல் யாராவது வீடியோ வெளியிடுபவர்களை   உடனடியாக கைது செய்கின்ற்ஃஅனர் இவர்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் ஆடு வெட்டுவோம் என்பதை ஏற்றுகொள்ள் முடியாத  அதனை முழுமையாக தடுக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்  பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்ய கூடாது என அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது அதனை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் ஜனவரி 5 ஆம் தேதி மதுரையில் பிராமணர் பாதுகாப்பிற்காக சட்டம் இயற்ற சொல்லிஉண்ணாவிரதம்   நடத்தயிருக்கிறோம்  தமிழ்நாடு காவல்துறை பொய் வழக்கு போடுகிறது இது தான் வேலையா மேலும் உளவுத்துறை விமான நிலையத்தில் நடிகர் விஜய் திரிஷாவை படம் எடுத்து வெளியிடுவது அவர்களின் வேலையா ஜனநாயக முறைப்படி இந்துக்கள் போராட்டம் நடத்தினால் அரசு அனுமதி வழங்குவது கிடையாது ஆனால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்குகிறார்கள் பிராமணாற்களை இழிவுபடுத்துவ்ரோயும் வன் கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கூறினார் 

: வேலூர்      

 குடியாத்தத்தில் கட்டிடம் மேஸ்திரி கோவிலில் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சி - ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. 




வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை, பாண்டியன் தெருவை சேர்ந்தவர் மனோகரன் வயது 48 கட்டி மேஸ்திரியாக உள்ளார்.இவருக்கு புஷ்பா என்ற மனைவியும் இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர்.  மனோகரன் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கெங்கையம்மன் கோவில்  உள்ளே சென்று கோவில் வளாகத்தில்  கற்பூரத்தை ஏற்றி முட்டி போட்டுக்கொண்டு தூரத்திலிருந்து அம்மனை கும்பிட்டுள்ளார். சாமி கும்பிட்ட சிறிது நேரத்தில் தன் கையில் கொண்டு வந்திருந்த பிளேடால் கழுத்தையே 30க்கும் மேற்பட்ட முறை அறுத்துக் கொண்டுள்ளார். அப்போது கோயிலுக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மனோகரனை பக்தர்களும் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு மனோகரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி  உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் கோவிலுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் மனோகரன் கழுத்து அறுத்துக் கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர் தொடர்ந்து கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவுகளை  ஆய்வு செய்தனர் அப்போது மனோகரன் தனக்குத்தானே பலமுறை கழுத்தை அறுத்துக் கொண்டது தெரிய வந்தது. இது குறித்து விசாரிக்கையில் கடந்த சில தினங்களாக மனோகரன் வீட்டில் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்அப்போது தன்னை யாரோ அழைப்பதாகவும் கூறிக் கொண்டு வந்துள்ளார் மேலும் பதட்டமாகவே இருந்துள்ளார்அவர் எதற்காக கோயிலுக்கு சென்று தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார் என தெரியவில்லை 
குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் வளாகத்தில் கட்டிட மேஸ்திரி  கழுத்து அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 ராணிப்பேட்டைமாவட்டம்   


வாலாஜா   அருகே பட்டப்பகலில் டெய்லர் கடையில் பணத்தை திருட முயன்ற பெண்ணை சக வியாபாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா   சோளிங்கர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே கீழ் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமாக துணி தைக்கும் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்து விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது..அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடையில் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து அதிலிருந்த சில்லரை மற்றும் பணம் ஏடிஎம் மற்றும் ஆதார் கார்ட் போன்ற அடையாள அட்டைகளை எடுத்து கொண்டிருப்பதாக அருகில் இருந்த சக வியாபாரிகள் கவனித்து இது தொடர்பாக கடையில் நுழைந்த அடையாளம் தெரியாத பெண் குறித்து உடனடியாக கடையின் உரிமையாளர் செல்வத்திடம் தகவல் தெரிவித்தனர் இதனால் பதறி அடித்து கொண்டு கடைக்கு ஓடி வந்த செல்வம் கடையில் உள்ளே நுழைந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர் ஆனால் அந்த பெண் உரிய பதில் அளிக்காததால் இது குறித்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போது சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.. இதனையடுத்து போலீசார் அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் வாலாஜா அருகே பட்டப்பகலில் துணி தைக்கும் டைலர் கடையில் உள்ளே நுழைந்து பணத்தை திருட முயன்ற பெண்ணின் துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்      

 பேரணாம்பட்டில் அரசு பள்ளி ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் பணம் கொள்ளை - போலீசார் விசாரணை. 
_____________________________________
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எல்லார் நகர் பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியர் மோசஸ் மற்றும் அவர் குடும்பத்தினர் கடந்த 24ஆம் தேதி சொந்த ஊரான வாணியம்பாடி பகுதியில்  தாய் வீட்டிற்கு கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். கிறிஸ்மஸ் விடுமுறையை முடித்துவிட்டு இன்று காலை பேரணாம்பட்டு பகுதியில் உள்ள சொந்த வீட்டிற்கு வந்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் பீரோவில் உள்ள துணிகள் அனைத்தும் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் பீரோவில் வைத்திருந்த சுமார் 25 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம்  கொள்ளை போனதே கண்டு அதிர்ச்சி அடைந்தார். பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில்  பேரணாம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கிறிஸ்மஸ் கொண்டாடுவதற்காக வெளியூர் சென்ற அரசு பள்ளி ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகை கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 வேலூர்      


 வள்ளிமலை முருகர் ஆலய திருப்படி திருவிழா நூற்றுக்கணக்கானோர் பால்குடங்களை எடுத்து வழிபாடு 
___________________________________________
     வேலூர்மாவட்டம்,காட்பாடியில் மிகவும் புகழ்பெற்ற வள்ளிமலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் முருகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருப்படி திருவிழா நடக்கும் அதே போல் இந்த ஆண்டும் சென்னையை சேர்ந்த வங்கி ஊழியர் மற்றும் வள்ளிமலை முருகன் சமய அறக்கட்டளை சார்பில் திருப்படி விழா நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களின் வேண்டுதல் நிறைவேறவும் உலகம் நலமுடன் வாழவும் வேண்டும் என வேண்டியும்  மலை மேல் உள்ள  கோவிலுக்கு ஆயிரம் படிகளுக்கு மேல் படி ஏறி பால் குடங்களை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று முருகர் வள்ளிதெய்வானையை தரிசனம் செய்தனர்

வேலூர்     


 
 அரியூர் தங்ககோவில் வளாகத்தில் சக்தியம்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்தன தானம் 
___________________________________________________
    வேலூர்மாவட்டம்,அரியூர் தங்க கோவில் வளாகத்தில் நாராயணி தங்ககோவில் நாராயணி மருத்துவமனை மற்றும் பக்த சபா சார்பில் தங்க கோவிலின் நிறுவனர் சக்தியம்மாவின் 49 ஆவது ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர் இதில் ஆர்வமுடன் அதிக்கபடியான ரத்த கொடை வழங்கினார்கள் இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன்,நந்தகுமார் ஆகியோர் இம்முகாமினை துவங்கி வைத்தனர் இதில் நாராயணி மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி,தங்ககோவில் இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்  தானமாக பெறப்படும் ரத்தமானது ஆபத்து காலங்களில் ஏழை மக்களின் உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது
 *தமிழ்நாடு முழுவதும் 56 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.* 

*திருச்சி எஸ்.பி. வருண் குமாருக்கு டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.* -சென்னையில் பணியாற்றி வரும் ஐ.ஜி.க்கள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை