GK வாசன் பேட்டி

வேலூர்  

அண்ணாமலையின் சாட்டையால் அடித்துக் கொண்ட போராட்டம்ஆட்சி மாற்றத்திற்கான யுக்தியில் இது ஒரு முக்கியமான பணியாக கருதப்படுகிறதுபாலியல் தவறுகள் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தலைவர் ஜி . கே. வாசன் வேலூரில் பேட்டி



வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மற்றும் காட்பாடி சட்டமன்ற தொகுதியின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட  தலைவர் டிவி சிவானந்தம்..இவர் சில நாட்களாக உடல் நலக்குறைவாக இருந்த இவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.அவரது உடல் அஞ்சலிக்காக காட்பாடி கிளித்தான் பட்டறை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது இரவு  காட்பாடி வந்தடைந்த தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜி கே வாசன் சிவானந்தம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அவரது உறவினர்களுக்கும் அவரது மகன் சிவலிங்கத்திற்கும் ஆறுதல் தெரிவித்தார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவதுடி.வி.சிவானந்தம் தமிழ் மாநில காங்கிரசுக்கு பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறார்.அவருடைய இழப்பு கட்சிக்கு  பெரும் இழப்பு என்று தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் குலைந்து இருக்கிறது. என்பதற்கு எடுத்துக்காட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் நிகழ்வு. பாலியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதற்கு சாட்சி தமிழகத்தின் பத்திரிகை செய்திகளும் தொலைக்காட்சி செய்திகளுமே ஆகும். தமிழகத்தின் ஏதாவது ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதியிலே இது போன்ற நிலை தொடர்ந்து ஏற்படுவது தமிழகத்திற்கு மிகவும் தலைகுனிவை ஏற்படுத்துகிறது.இந்த நிலை மாற வேண்டும்.தனிமனித ஒழுக்கம் தேவை என்பது ஒரு புறம் இருந்தாலும் இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முறையாக சரியாக அரசு எடுக்க வேண்டும். ஒருபுறம் டாஸ்மாக் கடைகள் மறுபுறம் போதை பொருட்கள் இவைகளை அரசு எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வளரத்தான் செய்யும்.என்பது என்னுடைய கருத்து அல்ல இது பொதுமக்களின் கருத்து. மிருகத்தனமாக பாலியல் தவறுகள் செய்பவர்கள் அவருடைய முதல் நிலையிலேயே தவறுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தூக்கு தண்டனை தர வேண்டும் என்பது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொடர் கோரிக்கையாக உள்ளது.அப்பொழுதுதான் சமுதாயத்தில் தவறு செய்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும்..அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண்ணின் புகார் பதிவு எப்படி வெளியானது என்பது குறித்த  கேள்விக்கு பாலியல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்று.இது ஒரு மானப் பிரச்சனை. மரியாதை பிரச்சனை இதில் அரசும் காவல்துறையும் உச்சகட்ட கவனத்தை கடைபிடிக்க வேண்டும்.துரதிஷ்டவசமாக இதைப் போன்ற நிலையை காவல்துறை கடைபிடிக்கவில்லை.அரசு கண்டிப்போடு செயல்பட்டால் வரும் காலங்களில் இது போன்ற தவறுகளை திருத்த முடியும். அரசு தங்களை திருத்தி கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள். பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற உட்கட்சி நிலவரம் குறித்த கேள்விக்குதேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பதில் அவர்களுடைய இயக்கம் உறுதி பட கையாள வேண்டும்  என்பதற்க்காக
அன்புமணி முழு அக்கறையோடு செயலாற்ற வேண்டும் என கூட்டம் நடந்ததாக தெரிவித்துள்ளார்இது  கட்சிக்கு பலனை தரும் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் ஆளுங்கட்சியின் தவறுகளை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர்.மக்கள் பார்வையில் இருந்து தவறு செய்பவர்கள் தப்ப முடியாது. ஒரு கட்சியை மக்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருக்கும் பொழுது மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படாமல் விரோத ஆட்சியாக செயல்படும் பொழுது மக்கள் அதை கூர்ந்து கவனித்து தேர்தல் நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்அண்ணாமலை  தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறதே என்ற கேள்விக்குதமிழக அரசின் தொடர் தவறான போக்கை கண்டிக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின்  தமிழக தலைவருடைய செயல்பாடுகள் தமிழகத்தில் சிறப்பாக உள்ளது.அந்த வகையில் தன்னைத்தானே வருத்திக் கொண்டு  தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்பதற்காகஅவர்கள் எடுத்திருக்கும் முடிவு ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் ஏற்படுத்தும் முடிவு அதற்கு ஏற்றவாறு தங்களுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள்மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான  யுக்தியில் முக்கியமான பணியாக இது கருதப்படுகிறது என்றார்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை