போளூர் அரசு பள்ளி
ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
அருள் ஆசி
போளூர் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1920 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் நூற்றாண்டு விழா குடியரசு தின விழா உடன் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பள்ளியின் முன்னால் மாணவரான காஞ்சி சங்கர மடப்பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கி பேசினார்.
போளூர் நகரம் பழமையும் பெருமையும் வாய்ந்த நகரம் இங்குள்ள சங்கர மடத்தில் நான் குருகுல மாணவனாகவும் பின்னர் இந்த பள்ளியில் மாணவனாகவும் படித்தேன் ஆன்மீக பணிக்காக மடத்திற்கு வருவதற்கு முன்னால் நான் மூன்று ஊர்களில் வசித்துள்ளேன் அதில் போளூர் நகரம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஊராக மாறிவிட்டது. எனக்கு வாழ்க்கையில் பல அனுபவங்களை கற்றுத் தந்த ஊர் இது .ஒரு அரசு பள்ளியை மறக்காமல் எவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து நூற்றாண்டு விழா கொண்டாடும் அளவுக்கு பணிபுரிந்து விழா குழுவின் சேவை பாராட்டுக்குரியது. நான் ஆன்மீக துறையில் இருந்தாலும் மக்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்க முடியும் என்று பார்வை கிடைத்ததற்கு இந்த பள்ளியில் நான் படித்ததும் ஒரு காரணமாகும். என்னதான் ஆன்மீகப் பணியில் ஈடுபட்டாலும் வாழ்க்கையில் உயர உழைக்க வேண்டும். உழைப்பதை பற்றி எல்லாருக்கும் சொல்லித் தர வேண்டும்.யாரும் சோம்பேறியாக இருக்கக் கூடாது. ஆடம்பரமாக வாழ கூடாது. கல்வியில் புதியவர்களாகவும் கலாச்சாரத்தில் பழையவர்களாகவும் நாம் விளங்க வேண்டும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும். ஒழுக்கத்தை சொல்லித் தர வேண்டும் .ஆசை வேண்டும் ஆனால் பேராசை கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும். எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் உண்மையான வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Comments
Post a Comment