உதவி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு பங்கரிஷிகுப்பம் கிராமத்தில் திருமதி அருணா மூன்று பெண் குழந்தைகளுடன் கணவர் இன்றி ஒழுகும் நிலையில் உள்ள ஓலை குடிசையில் வசித்து வருகிறார்.
வீட்டில் கழிவறை இல்லாததால் மூன்று பெண் குழந்தைகள் உட்பட நான்கு பேரும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்து வந்தனர்.
மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்திற்கு குளியலறை உட்பட கழிவறை புதிதாக கட்டிக் கொடுக்கப்பட்டது.
இதனை அந்த மூன்று பெண் குழந்தைகள் முன்னிலையில் இன்று கழிவறையை திறந்து வைத்தோம்.
நாங்கள் படித்து ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு வீட்டில் முதலில் கழிவறை கட்ட நினைத்தோம் ஆனால் இப்போதே இந்த கழிவறை எங்களுக்கு கிடைத்துள்ளது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Comments
Post a Comment