கூட்டம்
நாள். 05.01.2025
*தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு செயற்குழு கூட்டம்
&&&&&&&&&
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் வேலூர் (மாவட்ட அலுவலகத்தில்) பெல்லியப்பா கட்டிடத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் முனைவர் பே.அமுதா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத்தலைவர் ரா.காயத்திரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து துணைத்தலைவர் மற்றும்
இணை ஒருங்கிணைப்பாளர் கே.விசுவநாதன் வானவில் மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் அறிவியல் அறிஞர்கள், முக்கிய அறிவியல் கணித நிகழ்வுகள் அடங்கிய வருடாந்திர நாட்காட்டியினை தலைவர் பே.அமுதா வெளியிட்டார்.
வேலூர் கிளை செயலாளர் முத்து.சிலுப்பன், மாவட்ட இணைச்செயலாளர் எ.பாஸ்கர் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும் கே.வி.குப்பம் ஒன்றியத்தின் நிர்வாகியாக செயலாற்றிய தோழர் நெட்டேரி அமுதா அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
1. மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும் கே.வி.குப்பம் ஒன்றியத்தின் நிர்வாகியாக செயலாற்றிய தோழர் நெட்டேரி அமுதா அவர்களின் மறைவுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
2. இந்தியாவின் முதலாவது பெண் ஆசிரியை திருமதி.சாவித்திரிபாய் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதி, கவிஞர், அன்னாரின் பிறந்த நாளான ஜனவரி 3ஆம் தேதியை பெண் ஆசிரியர் தினமாக அறிவித்து பணிபுரிந்து வரும் பெண் ஆசிரியர்கள் தேர்வு செய்து விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. தமிழ்நாடு அரசின் ஆசிரியர் அறிவியல் மண்டல அளவிலான மாநாட்டினை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து வேலூரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
4. வேலூர் மாவட்ட அளவிலான 32வது குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை இந்த ஆண்டு ஜனவரி.25ஆம் தேதி நடத்துவது என்றும் மாநாட்டில் பங்கேற்க இது வரை பதிவு செய்துள்ள 300 ஆய்வறிக்கைகள் இம்மாநாட்டில் சமர்பிக்க உரிய ஏற்பாடுகள் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
5. சுற்று சூழல் உப குழு சார்பில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
6. ஆராக்கியம் உப குழுவின் சார்பில் தற்போது பரவி வரும் ஒட்டுண்ணி பாக்டீரியா பரவல் குறித்து மக்கடையியே விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
முடிவில் கே.விசுவநாதன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment