அஞ்சலி

வேலூர் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் பெல்லியப்பா இ.ஆ. ப மறைந்தார். 

அவர் ஒன்றுபட்ட வேலூர் மாவட்ட முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். 
செய்யாறு அரசு கலைக்கல்லூரி, 
திருவண்ணாமலை
அரசு கலைக்கல்லூரி, 
வாலாஜாபேட்டை மகளிர் அரசு கலைக்கல்லூரி அவரின் விடாமுயற்ச்சியால் தொடங்கப்பட்டது. 
வேலூர் மாவட்டம் இராணுவவீரர்கள்,  முன்னாள் இராணுவவீரர்கள் அதிக அளவில் உள்ளனர்.  அவர்களின் மேம்பாட்டிற்காக ஜவான்ஸ் மார்கெட் திறந்தார். 
கோட்டை கரையின்மேல் குறுகியபாதைதான் வேலூரின் பிரதான சாலை.  அதன் பக்கத்தில் சர்ச் இருக்கும் சாலை கிடையாது.  6 அடி பள்ளம் கொண்ட மண்சாலையை  மாற்றி இன்றைக்கு இருக்கும் நீண்ட அகல சாலையை வடிவமைத்தவர். 
கோட்டை சுற்றுசாலையில் குழந்தைகளுக்கான பார்வையற்றோர்,  காது கேளாதோர் பள்ளியை நிறுவினார். 
மகளிருக்கான கேளிக்கை மன்றத்தை
நிறுவினார். 

வாலாஜாபேட்டையில் மகளிர் கலைக்கல்லூரிக்கு எதிரில் அரசு ஊழியர்ளுக்காக அவர் பெயரில் நகர் உருவாக்கப்பட்டது.
வேலூர் மாநகரில் அண்ணாசாலையில் வங்கி உருவாகவும் மத்திய அரசு அலுவலகங்கள்,  வருமானவரித்துறை அலுவலகம் உருவாகவும் மைய அஞ்சல் அலுவலகம் உருவாகவும் வழிவகுத்தவர்.

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை