சோர்ந்து விடாதீர்
எதுவும் நிரந்தரமல்ல
எல்லாமே மாறும்.
எட்டு மாதங்கள் முன் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார் சந்திரபாடு நாயுடு!!
அவரை சந்தித்து தன் ஆதரவை தெரிவிப்பதுதான் திட்டம்!!
கடைசி வரை பிரதமரை சந்திக்க
வாய்ப்பு கிடைக்கவில்லை!
ஏமாற்றுத்துடன் திரும்பினார்.
73 வயது!அரசியல் பின்னடைவுகள் தோல்வி அதனால் கிடைத்த அவமானங்கள்,புறக்கணிப்புகள்!
கடைசி நேரத்தில் கூட சிறை!
இன்று முதல்வர்!ஒரு நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகும் அளவுக்கு முக்கியமானவர்.
தற்போது இவரின் வருகைக்காக டெல்லி பிரதமர் அலுவலகம் காத்துக்கொண்டு இருக்கிறது.
எந்த பிரதமர் சந்திக்காமல் தவறவிட்டாரோ இன்று காலையில் அவர் வலிய போனில் பேசுகிறார்.கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் வலிய பேசுகிறார்,தேசியவாத காங்கிரஸ் தலைவர் பேசுகிறார்.
காலம் எப்போதும் ஒருவருக்கானதல்ல!
எல்லோருக்குமானது!
அதனால் நீங்களும் எப்போதும் மனம் தளராதீர்கள்!
உங்கள் கடமையை சரிவர செய்யுங்கள்.
வரவேண்டியது தானே வரும்.
முகநூலில் ரசித்தது.
சுப்ரமணியன்.
நீதி_சாஸ்திரம்...🍒🍒
இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.
1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.
இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.
1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.
இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.
1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.
இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.
1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்..
#மனோதத்துவ_உண்மைகள்!!!
1. நம் மனதிடம் எதை நினைக்கக் கூடாது செய்யக் கூடாது என்று சொல்றோமோ அதை தான் முதலில் செய்யும்
2. பத்து பேர் நம்மை பற்றி நல்லதா சொல்வாங்க அதை விட்டு விடுவோம் ஒருத்தர் நம்மை பற்றி எதிர்மறையாக பேசினால் அதை நம்பி வருத்தப் படுவோம்.
3. நாம ஒரு விஷயம் வேண்டும் என்ற போது கிடைக்காது ஆனால் விலகிப் போனால் நம்மை தேடி வரும்
4. நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்று சொல்வார்கள் ஆனால் அப்படி நினைக்கும் போது தான் நம் எண்ணங்கள் ஏடாகூடமாக சிந்திக்கும்
5. நீங்கள் அதிகமாக கோவத்திலோ கவலையிலோ இருக்கும் போது குழந்தைகளுடன் விளையாடுங்கள் இரண்டும் குறைந்தது விடும்.
6. நமக்கு ஒருத்தரை பிடிக்கலனா அவர்களிடம் இருக்கும் கெட்டதை மட்டுமே பார்ப்போம் அதே பிடித்திருந்தால் நல்லதை மட்டுமே பார்ப்போம்.
7. உங்களுக்கு அதிகமான சோகமோ மன அழுத்தமோ இருக்கும் போது அதற்கான காரணங்களை எழுதுங்கள் அது குறையும்.
8. நடந்து விடுமோ என்று பயப்படும் பல விஷயங்கள் உண்மையில் நடப்பதில்லை.
9. கஷடத்திலே வாழும் ஒருவன் மற்றவர் கஷ்டப்படும் படி நடந்து கொள்ள மாட்டாங்க.
10. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது தான் யார் அவன் மீது உண்மையான அன்பு வைத்து உள்ளார்கள் என்று தெரியும்.
11. ஒருவரின் உண்மையான குணம் அவரை விட கீழ் இருக்கும் ஒருவரிடம் நடந்து கொள்வதை வைத்து அறியலாம்.
12. நமக்கு பயம் தரும் விஷயங்களை செய்யும் போது நமக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
13. ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்வது நமது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்
14. நாம் சந்தோஷமாக இருக்கும் போது எது செய்தாலும் சரியாக நடக்கும்
15. நாம் கோபமாக இருக்கும் போது எதை செய்தாலும் தவறாகவே நடக்கும்.
16. நம் மனதை குழப்பத்திலே வைத்து இருக்கும் போது மறதிகள் அதிகமாகும்.
.👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️
அறிவின் வெளிச்சம் . .
_*தெய்வம் விட்டது நல்லவழி என்று எப்போதும் நினையுங்கள்..*_
_*ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.*_
_*நம்மை ஆட்டிப் படைப்பது நம் மனம் தான்..*_
_*உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை..*_
_*எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது என்பதைக் கவனியுங்கள்..*_
ஒரு மனிதன்,
எந்தக் குறையும் இல்லை அவனுக்கு. ஆனாலும், மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை, சிரமப்பட்டான்.
அவன் மனைவி
பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள். "பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்!"
ஆசிரமத்துக்குப் போனான்...
பெரியவரைப் பார்த்தான். "ஐயா... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே!"
அவர் நிமிர்ந்து பார்த்தார், "தம்பி... உன் நிலைமை எனக்குப் புரியுது...
இப்படி வந்து உட்கார்!"
பிறகு அவர் சொன்னார்: "உன் மனசுக்குச் சில ரகசியங்கள் தெரியக்கூடாது... தெரிந்தா உன் நிம்மதி போயிடும்!'
"அது எப்படிங்க?"
சொல்றேன்...அது மட்டுமல்ல... மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்!"
"ஐயா... நீங்க சொல்றது எனக்கு புரியலே!'
"புரியவைக்கிறேன்... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு."
வயிறு நிறையச் சாப்பிட்டான்...
பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, "இதில் படுத்துக்கொள்" என்றார்.
படுத்துக் கொண்டான்...
பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து
கதை சொல்ல ஆரம்பித்தார்...
கதை இதுதான்:
ரயில் புறப்படப் போகிறது, அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்... அவன் தலையில் ஒரு மூட்டை. ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான்.
ரயில் புறப்பட்டது... தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை...
எதிரே இருந்தவர் கேட்கிறார்: "ஏம்ப்பா! எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வாறே? இறக்கி வையேன்!"
அவன் சொல்கிறான்:
"வேணாங்க! ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும்! என் சுமையை நான் சுமந்துக்குவேன்!'
பெரியவர் கதையை முடித்தார்.
படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான். "ஏன் சிரிக்கிறே?"
"பைத்தியக்காரனா இருக்கானே... ரயிலைவிட்டு இறங்கும் போது, மூட்டையைத் தூக்கிட்டு இறங்கினா போதாதா?" "அது அவனுக்கு தெரிய வில்லையே” "யார் அவன்?" -இயல்பாக கேட்டான்
"நீதான்!"
"என்ன சொல்றீங்க?''
பெரியவர் சொன்னார்: "வாழ்க்கை என்பதும் ஒரு ரயில் பயணம் மாதிரிதான். பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது.
தேவைப்படுகிறது மட்டும் மனசில் வைத்துக்கொள்!"
அவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது...
சுகமாக தூக்கம் வந்தது.
தூங்க ஆரம்பித்து விட்டான்...
கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார்.
"எழுந்திரு" என்றார் எழுந்தான்! "அந்த தலையணையைத் தூக்கு!" என்றார்.
தூக்கினான்...
அடுத்த கணம் "ஆ" வென்று அலறினான். தலையணையின் அடியில் ஒரு நாகப்பாம்பு, சுருண்டு படுத்திருந்தது.
"ஐயா! என்ன இது?"
"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு... அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்...!
அது அது எனக்குத் தெரியாது...
"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால் நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்!"
அவன் புறப்பட்டான்,, "நன்றி பெரியவரே... நான் போய் வருகிறேன்!"
"நிம்மதி எங்கே இருக்கிறது" என்பதைப் புரிந்து கொண்டாயா?
*"புரிந்து கொண்டேன்!"*
*"என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது".*
*"அறிவின் வெளிச்சத்தால், அதைக் தேடிக் கண்டுபிடித்து விட்டேன்".*
_*விரும்பியது எதுவும் கிடைக்காதவர்களுக்கு எதைப் பார்த்தாலும் ஏக்கமாய் இருக்கும். விரும்பியது எல்லாம் கிடைத்தவருக்கு, எது கிடைத்தாலும் அலுத்து போய் விடும்.*_
_*அதிர்ஷடத்தை நம்பி இல்லாமல், நமக்கு சாதகமான சூழ்நிலைகள் கிடைக்கும் போது அதைப் பயன் படுத்திக் கொள்பவர் தான் ஒரு நல்ல வெற்றியாளராக முடியும்.*_
_*என்ன நடந்தாலும் சரி ஒரு பொழுதும் சோர்ந்து விடாதீர்கள் பிறப்பும் இறப்பும் ஒரு முறை இடைப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து விடுங்கள்.*_
மனைவியை ஒய்ஃப் என்றோம்.
வாழ்க்கையை லைஃப் என்றோம்.
கத்தியை நைஃப் என்றோம்.
புத்தியை புதைத்தே நின்றோம் !
அத்தையை ஆன்ட்டி என்றோம்.
அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.
கடமையை டுயூட்டி என்றோம்.
காதலியை பியூட்டி என்றோம்!
காதலை லவ்வென்றோம்.
பசுவை கவ்வென்றோம்.
ரசிப்பதை வாவ் என்றோம்.
இதைதானே தமிழாய் சொன்னோம்!
முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம்.
அளவை சைஸ் என்றோம்.
அழகை நைஸ் என்றோம் !
மன்னிப்பை சாரி என்றோம்.
புடவையை சேரி என்றோம்.
ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம்.
தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்!
மடையனை லூசு என்றோம்.
வாய்ப்பை சான்சு என்றோம்.
மோகத்தை ரொமான்ஸ் என்றோம்.
தமிழை அறவே மறந்தோம்!
அமைதியை சைலன்ஸ் என்றோம்.
சண்டையை வயலன்ஸ் என்றோம்.
தரத்தை ஒரிஜினல் என்றோம்.
தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!
Comments
Post a Comment