எம்ஜிஆர் புகழ் ஓங்குக

MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை போல குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார்.

காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பெயரோ அல்லது கட்சிக்காரர் பெயரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை

. மனதில் ஏதோ தோன்றிய எம்ஜியார் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தெய்க்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது. அவர் செருப்பு தெய்க்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்டப்பட்டு இருந்தது விவரங்களை கேட்ட பொன்மனச்செம்மல் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும் ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.

திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால். காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் மூதல்வர் MGR அவர்கள். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் எட்டாவது அதிசயம் எம்ஜியார்.

செருப்பு தெய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை நடப்பிலும் வாழ்ந்தார் வாத்தியார்...

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.

அவர் புகழ் ஓங்கட்டும்.


சூளை கே எம் ஆனந்தன் வேலூர் மாவட்டம் ❤️

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை