நீதி

இன்றைய சிந்தனை🙏

             

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

உலகில் எத்தனை வகையான ஜீவன்கள் இருக்கின்றனவோ,

அத்தனை வகையான மொழிகளும் இருக்கின்றன.

நமக்குத் தான் அது புரிவதில்லை.

மனிதன் என்ற ஒரு தனி சிருஷ்டி இல்லை.

ஆனால்,

மனிதர்களுக்கு மட்டுமே மோட்சம் கிடைக்கின்றது என்று அந்த இல்லாதப் பொருள் நமக்கு உண்டென்று தோன்றுகிறது.

அந்தத் தோற்றம் நசியும் போது தான் நாம் மனிதனாகிறோம். 

நான் என்ற அகந்தையில் உழலுகின்ற வரையில்,

நாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டாலும்,

உண்மையில் மனிதர்கள் அல்ல.

வாழ்க வளமுடன்.

🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
தினம் ஒரு புத்தக மொழி



📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹

நீ பொய் சொல்லும் போது உன் மீது எனக்கு ஒரு சிறிய அதிகாரம் இருந்தது..
 
உன்னை வெல்வதற்கான ஒரு சிறிய சந்தர்ப்பம் இருந்தது.. 
 
நீ ஒரு சிறிய உண்மையைக் கூட சொல்லாமல் விடுவதில்லை..
 
அவை ஒரு சிலந்தியைப் போல என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டது..
 
எனது எல்லா அதிகாரத்தையும் அது பறித்துக் கொண்டு விட்டது.. 
 
உனது பொய்களின் வழியே நான் உனக்கு அவ்வளவு அருகாமையில் இருந்தேன்..
 
உனது உண்மைகளால் நான் உலர்ந்து உதிர்ந்து கொண்டு இருக்கிறேன் .

--- மனுஷ்ய புத்திரன்.

📚📚📚🌹📚📚📚🌹📚📚📚🌹☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

_*☘️ஒருவரைத் தவறாக புரிந்து கொள்வதில் முதல் இடத்திலும், சரியாகப் புரிந்து கொள்வதில் கடைசி இடத்திலும் இருக்கிறோம்.*_

_*☘️எல்லோரும் நல்லவர்கள் என்று நினைப்பது தவறு இல்லை. எல்லா நேரமும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்று நினைப்பது தான் தவறு.*_

_*☘️நேரத்திற்கு தகுந்தவாறு மாறுவதில் சில நேரங்களில் கடிகாரமும் தோற்றுவிடுகிறது சில மனிதர்களிடம்.*_

_*☘️நம்மை யாரும் காயப்படுத்துவதில்லை. தேவைக்கு அதிகமாக மற்றவர்க்கு முக்கியத்துவம் கொடுத்து நாமே நம்மை காயபடுத்திக் கொள்கிறோம்.*_

_*☘️இனிய  காலை வணக்கம்🙏🏻NRM*_

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்
கணவர்என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!
வையத்தியரும் சொன்னதில்லை! 
மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்! இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை! 
ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியைக்
 காணவில்லை. 
மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்.
 வையித்திரை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து சேவித்தாள். வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை. 
யாரம்மா நீ என்று கேட்டார். 
அதற்கு அந்த யுவதி நான்தான் உங்கள் மனைவி என்றாள்.
 வைத்தியருக்கு மிகவும் குழப்பம். 
என்ன நடந்தது என்று கேட்க மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
"  உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது. அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன். நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன். குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைம் பெண் ஆகிவிட்டேன்" என்றாள்
வைத்தியர் பதறி அடித்துபோய் " எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் " என்று கேட்க அதற்கு அந்த மனைவி "அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? " என்றாள்.
 வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்! 
*நீதி 1.பெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..*
*நீதி 2. அப்படி செஞ்சால் பொண்டாட்டிக்கு தான் லாபம்..*🤩💃🏼

 ☘️☘️☘️☘️☘️☘️
படித்து, ரசித்து, சிரித்து, பகிர்ந்தேன்
*_நோயாளி : டாக்டர், எனது மருந்துச் சீட்டில் இடது ஓரத்தில் நீங்கள் எழுதிய மருந்து திருப்பூா்ல எந்த மருந்துக் கடையிலும் கிடைக்கலையே?._*

*_டாக்டர் :_* *_அய்யோ அது மருந்து இல்லைங்க, என் பேனா ஒழுங்கா எழுதுதா, இல்லையான்னு கிறுக்கிப் பார்த்தேனுங்க._*

*_நோயாளி : என்ன !!! ?? _ இதத் தூக்கிகிட்டு அந்த மருந்தைத் தேடி 52 கடைகளுக்குச் கடை கடையா ஏறி இறங்கிருக்கேன். 😠😠_*

*_ஒரு கடைல, நாளைக்கு வாங்க தாரேன்னு சொல்றாரு. 😕_*

*_இன்னொருத்தர் என்னடான்னா, இந்த மருந்துக் கம்பெனிய இப்போ மூடிட்டாய்ங்க, வேறு கம்பனி தயாரிப்பு இதே மாதிரி மருந்தை தரட்டுமான்னு கேட்டாரு?._*

*_மூணாவதா போன மருந்துக் கடைக்காரர் சொன்னார், இந்த மருந்துக்கு மிகப்பெரிய டிமாண்ட் இருக்கு அதனால கிடைக்காது, 10,000 ரூபாயாகும் பிளாக்ல வேணும்னா வாங்கித் தரவான்னாரு._*

*_நாலாவது கடைக்காரரால எனக்கு மயக்கமே வந்துருச்சி, இந்த மருந்து புற்று நோய்க்கானது, உங்க வீட்டுல யாருக்கு புற்றுநோய் இருக்குன்னு கேட்டாரு பாருங்க ?_*

*_படித்ததில் ரசித்தது._*
படித்தேன்
சிரித்தேன்
ரசித்தேன்
பகிர்ந்தேன்
ஜெய .ஸ்ரீதர் M.A
அமைப்பாளர்
கம்பன் கழகம்
பண்ருட்டி

🤣 😂

*_சிரிக்க...சிந்திக்க...✍🏼🌹_*

Comments

Popular posts from this blog

உடனே குடியிருப்பு வாங்க வேண்டுமா?

இலங்கை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் சிறைபட்டது. இறந்தது வேலூரில் தான்