சோதனை நிறைவு
44 மணி நேர E.D சோதனை நிறைவு*
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடக்கம்*
தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் போக்குவரத்து மாலை 4 மணி வரை ரத்து
விருதுநகர் அருகே 6 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர் கைது*
ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் சசிபாலன் கைது
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 7 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த வச்சகாரப்பட்டி போலீசார்
பொங்கல் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்*
தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் உட்பட 5 ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
தாம்பரம் - கன்னியாகுமரி, சென்ட்ரல் - நாகர்கோவில் உள்ளிட்ட ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய நிலையில், சில நிமிடங்களில் விற்று தீர்ந்தன
அமெரிக்க மாடல் எனக் கூறி ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் 700 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த உ.பி இளைஞர் துஷார் சிங் (23) கைது
18 - 30 வயதில் உள்ள பெண்களை குறிவைத்து, பழகி, திருமணம் செய்துகொள்வதாக நம்பவைத்துள்ளார். பின் அந்தரங்க படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டி கைவரிசை காட்டியுள்ளார். டெல்லி பல்கலை. மாணவி அளித்த புகாரில் தற்போது சிக்கினார்.
நள்ளிரவில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு...*
*💫-வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு...*
*💫-ஜன.3 முதல் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை 44 மணிநேரத்திற்கு பிறகு நிறைவு...*
*💫-8 கார்களில் வந்திருந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டனர்...*
*💫-கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக தகவல்...*
தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
7-11 செ.மீ வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
[05/01, 4:06 pm] Dhinakaran: சென்னை குரோம்பேட்டை அருகே ரயில் மோதி 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் தேஜஸ்வர் (14) உயிரிழப்பு
டியூசன் சென்ற மகனை காணவில்லை என சிறுவனின் தந்தை, தாம்பரம் ரயில் நிலையத்தில் விசாரித்தபோது தன் மகன் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம்
பெரிய வெங்காயம் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரையிலும், தக்காளி கிலோ 17 ரூபாய்க்கு விற்பனை
சின்ன வெங்காயம் கிலோ 120 ரூபாய் வரையிலும், முருங்கைக்காய் கிலோ 100 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது
*திருப்பூர்: உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது*
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி பங்களாதேஷை சேர்ந்த நபர்கள் தங்கியிருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள், பங்களாதேஷை சேர்ந்த ரவ்ஹான் அலி (36), ஹரிருள் இஸ்லாம் (26), ரஹ்மான் (20), சோஹில் இஸ்லாமி (20), சபிபுல் இஸ்லாம் (40), அப்துல் ஹோசன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்து கட்டடம் மற்றும் பனியன் நிறுவனங்களில் பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த பல்லடம் காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments
Post a Comment