செய்திகள்
வேலூர்
வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் 2600 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் அழித்தனர்
______________________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையில் சாத்கர மலைபகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 லிட்டர் சாராய ஊறல்கள் மற்றும் 90 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவைகளை அழித்தனர் மேலும் பேர்ணாம்பட்டை சேர்ந்த சாராயம் காய்ச்சிய மணிமாறன்,வைதீஷ்வரன்,ஜெகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர் இதே போல பேர்ணாம்பட் காவல் ஆய்வாளர் ருக்மான் கதன் தலைமையில் போலீசார் சாத்கர் மலை பகுதிகளில் எலந்துமரத்து ஏரி,மாமரத்து பள்ளம் ஆகிய பகுதிகளில் சோதனை செய்ததில் 1100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 50 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர் பேர்ணாம்பட்டை சேர்ந்த ஆஷா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர் இதே போல கணியம்பாடி காவல்துறையினரும் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணமூர்த்திமற்றும் கமலநாதன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்
வேலூர் மாவட்டத்தில் தீவிரமாக கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
திருப்பத்தூர்மாவட்டம்
வாணியம்பாடி அருகே மாங்கா தோப்புகளில் தொடர்ந்து டன் கணக்கில் மாங்காய் திருடிய 2 இளைஞர்களை போலிசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த காவலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் மாந்தோப்புகளில் விளைந்துள்ள மாங்காய்கள் டன் கணக்கில் திருடு போவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் மாங்காய் தோப்பில் சுமார் 1 டன் மாங்காய் திருடு போனதாக காவலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து தொடர் மாங்காய் திருட்டில் ஈடுபட்டு வந்த மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (21), அண்ணாமலை (20) ஆகியோரை கைது செய்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர்மாவட்டம்
பெருமாபட்டு கிராமத்தில் சாரை பாம்பை கொன்று தோல் உரித்து கறியாக்கி சாப்பிட்ட வாலிபர் கைது! சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட வாலிபர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் (30) இவர் நேற்று சமூக வலைதளங்களில் சாரை பாம்பை தோல் உரிப்பது போல் வீடியோ ஒன்றை பதிவு செய்தார்.இதனை ஆதாரமாகக் கொண்டு திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் உத்தரவின் படி திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் வானவர் மற்றும் வனப் பணியாளர்கள் இந்த வீடியோ வைத்து விசாரணை மேற்கொண்டு பெருமாபட்டு கிராமத்திற்கு சென்று ராஜ்குமாரை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் சாரை பாம்பை தோல் உரித்து அதனை சமைத்து கரியாக்கி சாப்பிட்டதும் தெரிய வந்தது.இதன் காரணமாக திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டைமாவட்டம்
ஆற்காடு அருகே மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த ஐந்து இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை ஆற்காடு நகர போலிசார் கைது செய்து வேலுர் மத்திய சிறையில் அடைத்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம்ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செய்யார் செல்லும் சந்திப்பில் நகர காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான போலிசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞரை மடக்கி பிடிக்க முற்பட்டபோது இளைஞர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பிக்க முயற்சி செய்துள்ளார் இருப்பினும் போலீசார் தப்பிக்க முயன்ற இளைஞரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததின் காரணமாக அவனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் அருள் (31) என்பதும் இவர் மீது ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஐந்து முறை தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது..
மேலும் இருசக்கர வாகனத்தை திருடி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலை உயர்ந்த 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு வாகனங்களை திருடிய அருள் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்..
வாணியம்பாடி அருகே மாங்காய் திருட்டு வழக்கில் 2 பேர் கைது. காவலூர் போலீசார் நடவடிக்கை.
வாணியம்பாடி
திருப்பத்தூர் வாணியம்பாடி அடுத்த காவலூர் சுற்று வட்டார பகுதியில் இரவு நேரங்களில் மாந்தோப்புகளில் விளைந்துள்ள மாங்காய்கள் டன் கணக்கில் திருடு போவதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மந்தார குட்டை பகுதியை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் நிலத்தில் சுமார் 1 டன் மாங்காய் திருடு போனதாக புகார் தெரிவித்து இருந்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர் மாங்காய் திருட்டில் ஈடுபட்ட மந்தாரகுட்டை பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (21), அண்ணாமலை (20) ஆகியோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர்மாவட்டம்
ஆம்பூர் அருகே காலனி தொழிற்சாலை பின்புறம் இரண்டு பாம்புகள் நீண்ட நேரம் படமெடுத்து பின்னி பிணைந்து கொண்டிருந்ததை கண்டு காலணி தொழிற்சாலை தொழிலாளர்கள் ஓட்டம் -இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள காட்சிகள் வைரலாகி பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காலனி தொழிற்சாலை பின்புறம் சாலையோரம் சாரை மற்றும் நாகப்பாம்பு இரண்டு பாம்புகளும் நீண்ட நேரம் பின்னிப் பிணைந்து படம் எடுத்து ஆடிக் கொண்டிருந்த காட்சியை காலனி தொழிற்சாலை தொழிலாளர்கள் கண்டு அச்சமடைந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை சில இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ள காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
வேலூர்
காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலைபேருந்தில் படியில் தொங்கிய மாணவர்களை எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பிய காவல் உதவி ஆய்வாளர்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வந்து செல்கிறனர் இந்த நிலையில் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் காட்பாடியில் இருந்து குடியாத்தம் வரை செல்லும் வழித்தடம் 9ம் நம்பர் பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி நேற்று மாலை பேருந்தில் சென்றனர்.இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காட்பாடி காவல் உதவி உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் மிதிலேஷ்குமார் ஆகியோர் பேருந்தில் பயணம் செய்த பள்ளி கல்லூரி மாணவர்களை கீழே இறக்கி படியில் பயணம் செய்ய கூடாது படியில் பயணம் நொடியில் மரணம் ஏற்படும் எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.
Comments
Post a Comment