சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி............29/03/2025

கோட்சார ரீதியாக சனீஸ்வரபகவான்
கும்பராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சியடைகிறார்

நன்மையடையும் ராசிகள்
ரிஷபம்  துலாம்  &   மகரம்

சுமாரான ராசிகள் (திருப்தி)
மிதுனம் கடகம் & விருச்சிகம்

மோசமான ராசிகள்:--
அஷ்டமத்துச்சனி...சிம்மம்
கண்டகச்சனி..........கன்னி
அர்த்தாஷ்டமச்சனி-தனுசு
கும்பம்...7.5 சனி..மீதி...2.5
மீனம்.....7.5 சனி..மீதி...5.0
மேஷம்...7.5 சனி ஆரம்பம்

மேற்கூறியவை அனைத்தும்
 பொதுப் பலன்களே   
சிறப்பாக இருக்கும் ராசிகள் ஆனந்த கடலில் நீச்சலடிக்க வேண்டாம்
மோசமாக இருக்கும் ராசிகள் சோக கடலில் மூழ்க வேண்டாம்

https://www.facebook.com/groups/1089908112033920/?ref=share&mibextid=NSMWBT

சனீஸ்வரபகவானின் பரிபூரண அருளாசி கிடைத்தவர்கள் எந்த ராசியாக இருந்தாலும் நன்மைகளின் சதவீதம் அதிகரித்து தீமைகளின் சதவீதம் குறைந்துவிடும்

சனீஸ்வரபகவானின் பரிபூரண அருளாசி கிடைக்காதவர்கள் எந்த ராசியாக இருந்தாலும் நன்மைகளின் சதவீதம் குறைந்து தீமைகளின் சதவீதம் அதிகரிக்கும்

அவிட்டம் வெ.சீனிவாசன்
காட்பாடி  9677572395

சனீஸ்வரபகவான்......நீதிதேவன்

நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு   சுயநலமில்லாமல்  அடுத்தவர் நலனில் பொறாமைப்படாமல்  அவரவர்களுடைய மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலிருத்தல் அடுத்தவர்களை பற்றி புறம் பேசாமலிருத்தல் போன்றவை சனீஸ்வரபகவானின் பரிபூரண அருளாசி பெற்றவர்கள்

தானுண்டு தன் வேலையுண்டு என்று பொறுமையாக இருப்பவர்கள்
 வீணாக மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமலிருப்பவர்கள்
சனீஸ்வரபகவானின் பரிபூரண 
அருளாசி பெற்றவர்கள்

தனக்கு தான் எல்லாம் தெரியும் 
தன்னுடைய ஆலோசனை கேட்காமல்
யாரும் எதுவும் செய்ய கூடாதென்று
குடும்பத்தில் & அலுவலகத்தில் அதிகாரம் செய்து "தான்" என்ற அகந்தையுடன் வாழ்க்கை நடத்துபவர்களை சனீஸ்வரபகவானுக்கு பிடிக்காது அவருடைய அருளாசி கிடைக்காது இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களுக்கு சனீஸ்வரபகவானால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்

உதவியென்று கேட்டால் உதவி செய்ய வேண்டும் இல்லையேல் அமைதி காக்க வேண்டும்  
என்னிடமே கையேந்தும் நிலை வந்துவிட்டது என்று ஏளனமாக ஆணவத்துடன் பேசுபவர்கள் மற்றும் உதவி செய்து விட்டு வேறொன்றை அவர்களிடம் எதிர்பார்ப்பவர்கள் ஆகியோரை சனீஸ்வர பகவானுக்கு பிடிக்காது

https://www.facebook.com/groups/1089908112033920/?ref=share&mibextid=NSMWBT

கடுமையாக உழைப்பவர்களுக்கு சனீஸ்வரபகவானின் அருளாசியுண்டு
அடுத்தவர் உழைப்பில் சுகம் அனுபவிப்பவர்களை பிடிக்காது

ரிஷபம் துலாம் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு  29/03/2025 சனிப்பெயர்ச்சி பொற்காலம்
ஆனால்........
இந்த பொற்காலத்தை  நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டால் (நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடாமல் அவரவர்களுடைய மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலிருத்தல்) மிகவும் நல்லது 
இல்லையேல்.......
அடுத்த...சனிப்பெயர்ச்சி
ரிஷபம்.....7.5 சனி ஆரம்பம்
துலாம்.......கண்டகச்சனி
மகரம்...அர்த்தாஷ்டமச்சனி

ஒருவழி செய்துவிடுவார்
ஏனிந்த வாழ்க்கையென்று ஒவ்வொரு நொடியும் சிந்திக்கும் படி செய்து விடுவார்  

முடிந்தவரை புண்ணியத்தின் சதவீதத்தை அதிகரித்து பாவத்தின் சதவீதத்தை குறைத்து சனீஸ்வரபகவானால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தப்பித்து கொள்ளுங்கள்

புண்ணியமென்றால் தான தருமங்கள் செய்வது மட்டுமல்ல 
நல்லெண்ணங்களுடன் வாழ்க்கை வாழ்வதேயாகும்  

சனியின் காதலன்
அவிட்டம் வெ.சீனிவாசன்
காட்பாடி   9677572395

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை