அண்ணா
தம்பி, சம்பத்திடம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வேடிக்கைக்காகக் கேட்டாராம். "என்னடா சம்பத்து, உங்கள் அண்ணாத்துரை, அடுக்குமொழி பேசுகிறான். எதற்காக? அடுக்கு மொழி பேசினால்தான் இயக்கம் வளருமா? சீனியும் பாதாமும் சுவை தராதா, அதனைக் கூட்டிக் கலக்கி "ஜிலேபி' யாக்கினால் மட்டுந்தான் இனிப்பளிக்குமா? அதுபோல, இயக்கக் கொள்கைகளை மெருகு மெட்டு இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னால் உண்மை விளங்காதா. அதை விட்டு, அதனை அழகுபடுத்துகிறேன், சுவை கூட்டுகிறேன், அடுக்குமொழி தருகிறேன், ஓசை நயம் காட்டுகிறேன் என்று ஏன் உங்கள் அண்ணா கூறித் திரிகிறான்?'' என்று கேட்டாராம்.
சம்பத்து "சரிதானய்யா, "ஜிலேபி' யைச் சரியானபடி செய்யத் தெரிந்தவர்கள் செய்து தரட்டுமே, அதனால் என்ன? உங்கள் சீனியும் பருப்பும், "ஜிலேபி' வடிவம் எடுப்பதால், சுவைகெட்டா விடுகிறது?'' என்று திருப்பிக் கேட்டிருக்கிறான். அந்தப் பெரியவர். சம்பத்தின் வாதத் திறமையைக் காண்பதற்கே கேள்வி கேட்டவர், வயிற்று வலிக்காரரல்ல. எனவே அவர் மகிழ்ச்சியுற்று, முதுகில் தட்டிக் கொடுத்து, "பொல்லாத பயல்! போக்கிரிப் பயல்!' என்று செல்லம் பொழிந்தார்.
- அறிஞர் அண்ணா
Comments
Post a Comment