நல்ல நேரம்
*உலக இந்து திருக்கோவில்கள் அமைப்பின் நிறுவனத் தலைவர் அல்லும் பகலும் அயராத பணியாற்றும் ஆன்மீக செம்மல் வாழ்நாள் சாதனையாளர் மதிப்பிற்குரிய திரு டாக்டர் ஐயா என் சி சீனிவாசன் ஜி ஐயா அவர்களின் ஆசிர்வாதத்துடன் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க தினம் ஒரு பதிவு நம் ஆன்மீக குழுவிலிருந்து பதிவிடப்படுகிறது இன்றைய பதிவு எண் 1177 31-01-2025 தமிழ் பஞ்சாங்கம் ஹோரை மற்றும் ராசிபலன்கள் :*
31-01-2025
தமிழ் ஆண்டு, தேதி - குரோதி, தை 18
நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை
*திதி*
சுக்ல பக்ஷ துவிதியை - Jan 30 04:10 PM – Jan 31 01:59 PM
சுக்ல பக்ஷ திருதியை - Jan 31 01:59 PM – Feb 01 11:38 AM
*நட்சத்திரம்*
சதயம் - Jan 31 05:50 AM – Feb 01 04:14 AM
பூரட்டாதி - Feb 01 04:14 AM – Feb 02 02:33 AM
*கரணம்*
கௌலவம் - Jan 31 03:06 AM – Jan 31 01:59 PM
சைதுளை - Jan 31 01:59 PM – Feb 01 12:49 AM
கரசை - Feb 01 12:49 AM – Feb 01 11:38 AM
*யோகம்*
வரியான் - Jan 30 06:33 PM – Jan 31 03:32 PM
பரீகம் - Jan 31 03:32 PM – Feb 01 12:24 PM
*வாரம்*
வெள்ளிக்கிழமை
*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*
சூரியோதயம் - 6:43 AM
சூரியஸ்தமம் - 6:22 PM
சந்திரௌதயம் - Jan 31 8:05 AM
சந்திராஸ்தமனம் - Jan 31 8:16 PM
*அசுபமான காலம்*
இராகு - 11:05 AM – 12:33 PM
எமகண்டம் - 3:28 PM – 4:55 PM
குளிகை - 8:10 AM – 9:38 AM
துரமுஹுர்த்தம் - 09:03 AM – 09:50 AM, 12:56 PM – 01:43 PM
தியாஜ்யம் - 12:33 PM – 02:03 PM
*சுபமான காலம்*
அபிஜித் காலம் - 12:09 PM – 12:56 PM
அமிர்த காலம் - 09:30 PM – 11:00 PM
பிரம்மா முகூர்த்தம் - 05:07 AM – 05:55 AM
*ஆனந்ததி யோகம்*
சௌமியம் Upto - 04:14 AM
துர்வாஞ்சம்
*வாரசூலை*
சூலம் - West
பரிகாரம் - வெல்லம்
*சூர்யா ராசி*
சூரியன் மகரம் ராசியில்
*சந்திர ராசி*
கும்பம் (முழு தினம்)
________________________________
*வெள்ளி ஹோரை*
காலை
06:00 - 07:00 - சுக் - சுபம்
07:00 - 08:00 - புத - சுபம்
08:00 - 09:00 - சந் - சுபம்
09:00 - 10:00 - சனி - அசுபம்
10:00 - 11:00 - குரு - சுபம்
11:00 - 12:00 - செவ் - அசுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சூரி - அசுபம்
01:00 - 02:00 - சுக் - சுபம்
02:00 - 03:00 - புத - சுபம்
மாலை
03:00 - 04:00 - சந் - சுபம்
04:00 - 05:00 - சனி - அசுபம்
05:00 - 06:00 - குரு - சுபம்
06:00 - 07:00 - செவ் - அசுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
________________________________
நாளைய (31-01-2025) ராசி பலன்கள்
மேஷம்
ஜனவரி 31, 2025
பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் ஏற்படும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். பணிகளில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நுணுக்கங்களை அறிவீர்கள். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : தெளிவுகள் ஏற்படும்.
பரணி : ஆர்வம் மேம்படும்.
கிருத்திகை : மரியாதை அதிகரிக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 31, 2025
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயண முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத சிலரின் உதவியின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வர்த்தக பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : மாற்றங்கள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 31, 2025
வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி பொறுமையை கையாளவும். உடலில் ஒரு விதமான சோர்வுகள் மூலம் தாமதம் ஏற்படும். அரசு செயல்களில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செயல்படவும். செயல்பாடுகளில் ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : அலைச்சல் ஏற்படும்.
புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 31, 2025
வியாபாரம் நிமித்தமான பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உயரதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூசம் : வாக்குறுதிகளில் கவனம்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 31, 2025
வியாபார பணிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் உண்டாகும். காப்பீடு பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : தாமதங்கள் குறையும்.
பூரம் : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 31, 2025
இழுபறியான வரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த காரியங்கள் நிறைவேறும். வழக்கில் திருப்பம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
உத்திரம் : வரவுகள் கிடைக்கும்.
அஸ்தம் : லாபங்கள் மேம்படும்.
சித்திரை : திருப்பம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 31, 2025
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மனதை உறுத்திய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் சேர்ப்பது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் சாதகமாகும். குழந்தைகள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொருளாதார விஷயங்களில் மேன்மை உண்டாகும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்
சித்திரை : தடைகள் விலகும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : மேன்மையான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 31, 2025
சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கடன் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : குழப்பங்கள் நீங்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : கருத்துகளில் கவனம்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 31, 2025
வித்தியாசமான சிந்தனைகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தொல்லை குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்
மூலம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூராடம் : அனுபவம் வெளிப்படும்.
உத்திராடம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 31, 2025
கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். சகோதரர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். அசதி மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவோணம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 31, 2025
எதிர்பாராத சிலரின் உதவிகளால் தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்துச் செயல்படவும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்கவேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீல நிறம்
பூரட்டாதி : மாற்றமான நாள்
உத்திரட்டாதி : ஆசைகள் அதிகரிக்கும்.
ரேவதி : விழிப்புணர்வு வேண்டும் நம் உலக இந்து திருக்கோவில்கள் அமைப்பின் இன்றைய பதிவு
Comments
Post a Comment