பஞ்சாங்கம்
30-1-2025 தை 17
*ஸ்ரீநிவாஸன் திருக்கணித பஞ்சாங்கம்* & *திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழ் பஞ்சாங்கத்தின் படி*
*மேலும் தகவலுக்கு* கருப்பூர் ஸ்ரீநிவாஸன் ஸாதீக ஸ்ரீ: ஜோதிட நிலையம்,சேலம் (dt),India whatsapp 9360180430
*இன்றைய தின பஞ்சாங்கம்*
*நாள்* 30-1-2025
*தமிழ்* குரோதி ௵ உத்தராயனம் *ஹேமந்த ருது* தை ௴ 17 - ந் தேதி *வியாழக்கிழமை* இன்று மாக சுத்த சுக்ல பக்ஷ *பிரதமை* மாலை 4:11 pm வரை பிறகு *துவிதியை* திதி
*நக்ஷத்திரம்* காலை 7:15 am வரை *திருவோணம்* பிறகு 5:51 am வரை *அவிட்டம்* பிறகு *சதயம்* நக்ஷத்திரம்
*யோகம்* இன்று *வியதீபாதம்* 6:33 pm முதல் *வரீயான்* நாம யோகம்
*கரணம்* 4:11 pm வரை *பவ* பிறகு 3:06 am வரை *பாலவ* பிறகு *கௌலவ* கரணம்
நேத்ரம் 0 ஜீவன் 0
விவாக சக்கரம் *நடு*
வார சூலை *தெற்கு*
யோகிணி *கிழக்கு*
இன்று *மேல் நோக்கு நாள்*
சிரார்த்த திதி *பிரதமை*
இன்று 5:51 am வரை சித்த யோகம் பிறகு மரண யோகம்
*இன்றைய ஆனந்தாதி யோகம்* :-
வியாழக்கிழமை திருவோணம் சேர்ந்தால் *த்வஜ யோகம்* பலன் ராஜ்ய லாபம்
வியாழக்கிழமை அவிட்டம் சேர்ந்தால் *ஸ்ரீ வத்ஸ யோகம்* பலன் லக்ஷ்மீ கடாக்ஷம்
வியாழக்கிழமை சதயம் சேர்ந்தால் *வஜ்ர யோகம்* பலன் கலஹம்
*விசேஷங்கள்* :-
மாக சுத்தம்,இஷ்டி,மாக ஸ்னான ஆரம்பம்,கரி நாள்,சந்திர தரிசனம், சியாமளா நவராத்திரி பூஜாரம்பம், வியதீபாத சிரார்த்தம்
*#_மாக_சுத்தம்*
சாந்திரமான முறைப்படி இன்று முதல் மாக மாதம் எனும் மாசி மாதம் ஆரம்பிக்கிறது. அதன் வளர்பிறையில் மாக சுத்தம் என குறிப்பிடப்படுகிறது.
*#_இஷ்டி*
இஷ்டி என்றால் புனித நெருப்பு என்று பொருள்.
அமாவசை (தர்சேஷ்டி) அல்லது பௌர்ணமி (பௌர்ணமாசேஷ்டி) திதியின் கடைசி நான்காம் பாகமும் பிரதமை திதியின் முதல் மூன்று பாகமும் சேர்ந்த காலம் இஷ்டி காலமாகும்.
இந்த நேரத்தில் கணபதி ஹோமம்,ஒளபாசனம்,அக்நி ஹோத்ரம்,சமிதாதானம் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.இதன் விளைவாக மாதம் முழுவதும் நிம்மதி,நல்லவர் சேர்க்கை,பணவரவு, ஆரோக்கியம் உண்டாகும்.
இந்த நாளில் நாம் பூஜைகளை மேற்கொண்டால், பூஜைக்குரிய தேவர்கள் அருகிலேயே வந்து சூட்சும ரூபமாக நின்று வணக்கங்களை ஏற்றுக்கொள்வார்கள்.இஷ்ட பிரார்த்தனை செய்தால் நிச்சயம் நிறைவேற்றி கொள்ளலாம்.
*#_மாக_ஸ்னானம்_ஆரம்பம்*
பொதுவாக தோஷ நிவர்த்தி செய்ய அதற்கான பரிஹாரங்கள் செய்ய இந்த மாதம் உகந்தது.இன்று முதல் 30 நாட்களுக்குள் புனிதமான புண்ணிய நதிகளில் முறையாக நீராடி பூஜைகள் செய்வதால் புண்ணியம் கிடைக்கும். தோஷங்கள்,பாபங்கள் விலகும்.
*#_சியாமளா_நவராத்திரி ஆரம்பம்*
தேவி வழிபாட்டில் சக்தி வழிபாடுகளில் 4 நவராத்திரி விசேஷமாக கொண்டாட படுகிறது.
வசந்த நவராத்ரி,ஆஷாட வராஹி நவராத்திரி, சரத் சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்திரி.இந்த மாக மாதத்தில் வருகிற சியாமளா நவராத்திரியில் அம்பாளை சியாமளா தேவியாக இன்று முதல் 9 நாட்கள் பூஜை செய்து நவராத்திரி கொண்டாட வேண்டும்.இதன் மூலம் நல்ல ஞானமும் ஐஸ்வர்யமும் உண்டாகும்.இந்த சியாமளா நவராத்திரி காலத்தில்,
வருகிற பள்ளிக்கூட பொது தேர்வுகளில் ( 10ம் வகுப்பு,+2 )மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக லக்ஷ்மீ ஹயக்ரீவர் ஹோமம் சரஸ்வதி ஹோமம் வித்யா கணபதி ஹோமம் ஏற்பாடு செய்ய பட உள்ளது.கலந்து கொள்ளவும்.
#_வியாழக்கிழமையான இன்று
*#_ராகு_காலம்* :-
பகல் 1:30 pm - 3:00 pm
*#_எமகண்டம்* :-
காலை 6:00 am - 7:30 am
*#_குளிகை* :-
காலை 9:00 am - 10:30 am
*#_காலன்* :-
நண்பகல் 10:30 am - 12:00 pm
*#_அர்தபிரகணன்* :-
பகல் 3:00 pm - 4:30 pm
*#_இரவு_எமகண்டம்* :-
10:30 pm - 12:00 am
*#_வார_சூலை* தெற்கு,தென்கிழக்கு 2:48 pm வரை
*#_பரிகாரம்* தைலம்
*#_சுப_ஹோரை_நல்ல_நேரம்* :-
காலை 9:00 am - 10:30 am
பகல் 1:00 pm - 1:30 pm
மாலை 4:30 pm - 7:00 pm
இரவு 8:00 pm - 9:00 pm
( மேற்கண்ட நேரங்கள் பொதுவானவை. அந்தந்த ஊரின் சூரிய உதய - அஸ்தமன நேரத்திற்கு ஏற்ப சிறிது மாறுபடும். )
சேலம் சூர்ய உதயம் 6:42 am; அஸ்தமனம் 6:19 pm
*#_சந்திராஷ்டமம்* இன்று *மிதுனம்* ராசி 6:35 pm முதல் *கடகம்* ராசி
*வதை தாராபலன்* :-
உத்திரட்டாதி,பூசம்,அனுஷம்
இன்று ( 30-1-2025) தை 17
*#_கிரஹ_பாதசாரம்* :-
*சூரியன்* - 6:08 pm முதல் திருவோணம் 3
*சந்திரன்* - திருவோணம் 7:15 am முதல் அவிட்டம் 5:51 am முதல் சதயம்
*செவ்வாய்* (வ) - 8:55 pm முதல் புனர்பூசம் 2
*புதன்*(அ) - 10:05 pm முதல் திருவோணம் 1
*குரு*(வ) - ரோஹிணி 3
*சுக்கிரன்* - பூரட்டாதி 4
*சனி* - பூரட்டாதி 1
*ராகு* - உத்திரட்டாதி 1
*கேது* - உத்திரம் 3
*மாந்தி* பகல் - அசுவினி 1
இரவு - மூலம் 1
நலம் அன்புடன்
*ஸ்ரீநிவாஸ் ஐயர்,ME.,MA(Astro),*
*ஸாதீக ஸ்ரீ: ஜோதிட & புரோஹித நிலையம் கருப்பூர்,சேலம்(dt)*
*Further details and appointment ...*
*📲/whatsapp 9360180430*
சுபமஸ்து
Comments
Post a Comment