செய்திகள் - 1
வேலூர் 28-2-25
சோமசமுத்திரம் திருவள்ளூவர் தெருவின் நடுவே உள்ள மின் கம்பத்தை இடமாற்றம் மக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் தெரு நடுவில் இரண்டு மின்கம்பம் உள்ளது.திருவிழா காலங்களில் சுவாமி ஊர்வலம் வாகனம் , நெசவு பொருட்கள் ஏற்றி வரும் வாகனம் வந்து செல்லவும், அவசர மருத்துவ சேவைக்கு ஆம்புலன்ஸ் வந்து செல்லவும், இறந்தவர்களின் சடலத்தை எடுத்து செல்லவும் முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இந்த இரண்டு மின்கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் 28-2-25
பார் கவுன்சில் பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் மொழி ஆதிக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட கோரி வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்
வேலூர்மாவட்டம்,காட்பாடி பார் அசோசியேஷன் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு குழுமம் (ஜெ.ஏ.சி) சார்பில் 20 ஆயிரம் வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகைமத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட வரைவு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு பார் கவுன்சில் என உள்ளதை மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் மொழி ஆதிக்க திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்,வழக்கறிஞர்கள் சேம நல நிதி 25 லட்சமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து காட்பாடி நீதிமன்றம் முன்பு காட்பாடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் 30 வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் விரைவில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு குழுமம் (ஜெ.ஏ.சி ) சார்பில் 20 ஆயிரம் வழக்கறிஞர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்தனர்.
வேலூர் 28-2-25
31 வயது காது மற்றும் வாய் கேளாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது இளைஞர் கைது அதிமுக பொதுக்கூட்டத்தில் தாய், தந்தை சென்றிருந்தபோது நடந்த சோகம்.போலீசார் விசாரணை.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த ஆலங்கனேரி கிராமத்தில் அதிமுக கிளை செயலாளர் முனிசாமி மனைவி சாவித்திரி (எ) தேவி இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இரண்டாவது பெண் கௌதமி வயது 31 மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் ஆகாமல் வீட்டிலேயே தாய் தந்தையுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று கே வி குப்பத்தில் நடந்த அதிமுக கட்சி பொதுக் கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் முனிசாமி மற்றும் அவர் மனைவி சென்று இருந்தன. பொதுக்கூட்டம் முடிந்து வீட்டிற்கு சென்றவுடன் மாற்றுத்திறனாளியான கௌதமி நடந்த சம்பவத்தை தனது செய்கை மூலம் தெரிவித்துள்ளார். உடனடியாக தந்தை முனிசாமி கே வி குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்ற காவல் துறையினர் விஷாலை தேடி வந்தன. இந்நிலையில் விஷால் நேற்று இரவு கிடைக்காததால் நண்பர்கள் தானேஷ் குமார் மற்றும் நிவாஸ் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் விஷால் வீட்டில் மது போதையில் இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவலின் பெயரில் விரைந்து சென்ற கேவி குப்பம் காவல்துறையினர் விஷாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் விஷாலுக்கு தாய் தந்தை யாரும் இல்லை என்பதால் மாற்றுத்திறனாளியான கௌதமியின் தாய் தந்தை தான் அவரை பார்த்துக்கொண்டு வந்துள்ளனர். மேலும் கௌதமியை மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பிள்ளை போல் வளர்த்து வந்த உறவினர் மகன் மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் 28-2-25
தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈட்டை வழங்கவும் சுத்திகரிக்கப்படாமல் நீரை வெளியேற்றும் உரிமையாளர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் என்ன நடவடிக்கையை எடுத்தீர்கள் என வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சரமாரி கேள்வி அதிகாரிகள் திணறல்
___________________________________
வேலூர்மாவட்டம்,வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நடந்தது இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் விவசாயிகளும் திரளானோர் பங்கேற்றனர் இதில் விவசாயிகள் பேசுகையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் ஆயிரக்கணக்கான விவசாய விளைநிலங்களும் பொதுமக்களும் பாதிக்கபடுகின்றனர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த நஷ்ட ஈட்டை எப்போதும் வழங்குவீர்கள் கணக்கெடுப்பு பணியானது துவங்கியுள்ளதா மேலும் கழிவு நீரை சுத்தம் செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றும் ஆலை உரிமையாளர்களை கட்டாயம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மாசுகட்டுபாட்டு வாரியம் எந்த நடவடிக்கையையும் ஏன் எடுக்கவில்லை மாசுக்கட்டுபாட்டுவாரியம் கழிவுநீரில் ரசாயணம் கலப்பதை அளவீடு செய்து கண்காணிப்பது கிடையாது என சரமாரியாக குற்றம்சாட்டினார்கள் விவசாயிகளின் கேள்வியால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் மேலும் விவசாயிகள் பேசுகையில் நில உரிமையாளர்கள் வருவாய்த்துறையில் நில ஆவணத்தை ஏற்படுத்த பதிவு செய்ய வேண்டுமென கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது போதுமானதல்ல அதனை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் ஏரி கால்வாய்களை தூர்வார வேண்டும் தென் பென்னை பாலாறு இணைப்பு திட்டம் குறித்து தமிழக அரசு மீண்டும் மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டது அதன் பணிகளை துவங்கவுள்ளோம் என அதிகாரிகள் கூறினார்கள்
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்!*
வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகையை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் 12% அபராதம்.
வணிக வளாக கட்டடங்களின் குத்தகை காலம் 9 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக அதிகரிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் 15% வாடகை உயர்த்தப்பட்டு வந்த நிலையில், இனி ஆண்டுக்கு 5% மட்டுமே உயர்த்தப்படும்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 127 வணிக வளாகங்களில் உள்ள 5,914 கடைகளுக்கும் மாதம் ₹180 கோடி வசூல் செய்யப்படுகிறது.
*சென்னையில்* ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து 63,680 ரூபாய்க்கும், ஒரு கிராம் 7,960 ரூபாய்க்கும் விற்பனை.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு*
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 930 புள்ளிகள் சரிந்து 73,683 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 269 புள்ளிகள் குறைந்து 22,275 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு - மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி
* மாடு வளர்க்க ரூ.500 கட்டணம்; குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம்
* ஆடு வளர்க்க, 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம்
* நாய், பூனை வளர்க்க, 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம்
: *திருப்பத்தூர் பா.வு.சா நகரில் இரண்டாவது மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற ஆட்டோ டிரைவர்* .
ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியம் பெரியகொம்மேஸ்வரம் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு கத்தி குத்து. ஆபத்தான நிலையில் வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதி.
உறவினர் மகன் கைது
Comments
Post a Comment