செய்திகள் - 2

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, வேளாண்மை இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுப்புலட்சுமி, விஷ்ணு பிரியா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வைத்தனர். 
 கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவித்தனர்.அதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது,வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் பல்வேறு தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியிடுகின்றனர். இதனால் நீரின் தரம் பாதிக்கப்பட்டு விஷமாக மாறி வருகிறது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணை மற்றும் அகரம் பாலாற்றில் தண்ணீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்ய வேண்டும்.இதை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவுநீரை ஆற்றில் கலப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன்படி எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்
நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 3,500 வழங்க வேண்டும். மேலும் சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட வேண்டும். நெல் மூட்டைகள் மழையில் நனைந்தால் அதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.விவசாய நிலங்களில் மருந்து தெளிக்க டிரோன் வழங்கப்பட வேண்டும். இந்த டிரோன் வட்டாரம் வாரியாக கூட்டுறவு துறையோ, ஊராட்சி துறையோ வாங்கி அதை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட வேண்டும். 
முதல்வர் மருந்தகம் நகர பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைக்க வேண்டும். ஊசூரில் முதல்வர் மருந்தகம் அமைக்கப்பட வேண்டும். 
தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 
வேலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் மாம்பழ ஜூஸ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். காளாம்பட்டு பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் பேசினர். 
தொடர்ந்து அதிகாரிகள் அவர்களது கேல்விகளுக்கு பதில் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, உங்களது கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சில கோரிக்கைகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை பொறுத்தவரையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல்லில் இருந்து நாட்றம்பள்ளி வரை சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஆய்வு செய்து மதிப்பீடும் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையால் பாதிப்பு ஏற்பட்ட விவசாய நிலங்களுக்கு சுமார் ரூ 95 லட்சம் மதிப்பிலும், பெஞ்சல் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ. 27 லட்சம் இழப்பீடும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 
விவசாய நிலத்திற்கு மருந்து தெளிக்க டிரோன் வாங்கப்பட்டுள்ளது. அதை மானிய விலையில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு வட்டாரம் வாரியாக டிரோன் வாங்குவது குறித்து ஆய்வு செய்யப்படும். ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டுள்ள டிராக்டர் போன்ற வேளாண் பொருட்களை விவசாயிகள் வாங்கி பயன் பெறலாம். பாலாற்றில் கழிவுநீர் கலக்கும் தொழிற்சாலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். மேலும் மாதிரிகள் பல்வேறு இடங்களில் எடுக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பகுதியில் தண்ணீர் மாசுபட்டு உள்ளது என்பதை கண்டறிய முடியும். இந்த விவகாரத்தில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நடத்தை சந்தேகத்தால் 
இரண்டாவது மனைவியை வெட்டி கொலை செய்த ஆட்டோ டிரைவர் 

நியூஸ் 1 திருப்பத்தூர் பஉச நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(52), ஆட்டோ டிரை வர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் ரமேஷ்க்கு பஸ் நிலையத்தில் பூ வியாபா ரம் செய்து வந்த தீபா (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு சுமார் 15 ஆண் டுகளுக்கு முன் அவரை 2வது திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில் தீபா, இரவு நேரத்தில் யாருடனோ செல்போனில் அடிக்கடி பேசி வருவதாக ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட் டது.வெள்ளிக்கிழமை நாட்றம்பள்ளி அருகே கல்நார்சம்பட்டி கிராமத்தில் நடந்த மயா னக்கொள்ளை திருவிழாவுக்கு ரமேசும், தீபாவும் சென்றனர். பின்னர் இரவு ஊர் திரும்பிய அவர்கள்,தங்களது வீட்டிற்கு செல்லாமல், பஉச நகரில் உள்ள ரமேஷின் அத்தை வரலட்சுமி வீட்டிற்கு சென்று தங் கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவும் தீபா யாரு டனோ போனில் பேசியுள்ளார். இதையறிந்த ரமேஷ் ஷ் சனிக்கிழமை காலை தீபாவிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தீபா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.பின்னர் தீபாவை வெட்டிக் கொலை செய்த கத்தியுடன் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்ற ரமேஷ், தனது மனைவி தீபாவை வெட்டிக்கொலை செய் துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். இதைய டுத்து போலீசார், சம்பவ இடம் சென்று தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக தகராறில் 2வது மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்துவிட்டு போலீசில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப் பையும் ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பத்தூர்மாவட்டம்  

ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக திமுக ஊராட்சி மன்ற தலைவியை அவரது கணவரின் அண்ணன் மகன் வீட்டில் புகுந்து கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி 


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியகொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்  திமுக ஊராட்சி மன்ற தலைவி சோபனா கோவிந்தராஜ் இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சோபனாவின் கணவர் கோவிந்தராஜ் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டு உயிரிழந்தார் இந்த நிலையில் ஷோபனா தனது இரண்டு குழந்தைகளை வைத்து ஊராட்சி நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளார் இந்த நிலையில் சோபனா கோவிந்தராஜுக்கும் கோவிந்தராஜின் அண்ணன் பாண்டியன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இதேபோன்று தகராறு ஏற்பட்டு பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் சோபனாவை தாக்கியதாக உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  இரவு நேரத்தில் வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த சோபனாவை அவர்கள் கணவரின் அண்ணன் மகன்  வயது சிறுவன் (17) திடீரென சோபனாவின் வீட்டிற்குள் புகுந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் கை ,முதுகு, மார்பு உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பியோடியுள்ளார்  இதில் நிலை குலைந்து போன சோபனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உயிருக்கு ஆபத்தான முறையில் இருந்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்து விரைந்து சென்ற உமராபாத் காவல்துறையினர் தனது சொந்த சித்தியை கத்தியால் பல இடங்களில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து விட்டு தப்பியோடி வீட்டின் அருகே பதுங்கி இருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 


ஆம்பூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக ஊராட்சி மன்ற தலைவியை தனது சொந்த சித்தி என்றும் பாராமல் வீடு புகுந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியதில் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

 திருப்பத்தூர் மாவட்டம்    

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ரமேஷ் (53) இவரது இரண்டாவது மனைவி தீபா (வயது 35) இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ரமேஷ்க்கு நடத்தையில் சந்தேகம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பாவுசா நகரில் உள்ள ரமேஷின் தங்கையான வரலட்சுமி வீட்டிற்கு தூங்குவதற்காக தீபா சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே திரும்பவும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியால் தீபாவை சரமாரியாக உடலில் பல்வேறு இடங்களில் வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி  சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் (பொறுப்பு) சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வேலூர் அடுக்கும் வரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படுகொலை செய்த தீபாவின் உடலை பார்த்து உறவினர்கள் கத்தி கதறி அழுதனர்..

 ராணிப்பேட்டைமாவட்டம்    


அரக்கோணம் எம் ஆர் எஃப் தொழிற்சாலையின் ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, நிரந்தர பணியாளர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி புறக்கணிப்பு செய்து தொழிற்சாலை முகப்பு வாயில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான டயர் தயாரிக்கும் தொழிற்சாலை யான எம்ஆர்எப் தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களாகவும் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக  பணி செய்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் அதேபோல் 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து பணி செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தரமான உணவை போல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சாலை நுழைவாயில் முன்பு பணிகளைப் புறக்கணித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்ஆர்எப் நிர்வாகத்தினர் மற்றும் அரக்கோணம் கிராமிய காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் எம்ஆர்எப் தலைமை நிர்வாக கவனத்திற்கு இப்ப பிரச்சினையை கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி செய்வதாக அரக்கோணம் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். இன்னும் ஒரு வார கால அவகாசத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

 ராணிப்பேட்டைமாவட்டம்           28-2-25

 
 வாலாஜா  அருகே ஒரு பிரியாணி வாங்கினால் இன்னொரு பிரியாணி இலவசம் என அறிவித்ததால் நீண்ட வரிசையில் நின்றபடி அலைமோதிய கூட்டம்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் பிரியாணி இன்று தவிர்க்க முடியாத உணவாக மாறி உள்ளது பிரியாணி என்றாலே   பிரியாணியின் வாசம் நம்மை ஈர்த்து விடுகிறது மக்களின் உணவு விருப்பத்தை அறிந்து பல்வேறு பிரியாணி கடைகள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு விசாரம் வாலாஜா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் வாலாஜா எம்பிடி ரோடு அணைக்கட்டு சாலையில் ஜப்பர் சிக்கன் மட்டன் என்ற பெயரில் இன்று புதிய பிரியாணி திறப்பு விழா நடைபெற்றது.

மேலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் ஒரு ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என அறிவிப்பு செய்ததால், பிரியாணி பிரியர்கள் கடையின் முன்பாக போட்டா போட்டி போட்டு கொண்டு அணிவகுத்து நீண்ட வரிசையில் நின்றபடி பிரியாணியை வாங்கிச் சென்றனர் முதல் நாள் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் திரளாக திரண்டு பிரியாணி வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது..]

 ராணிப்பேட்டைமாவட்டம்    

 
திமிரி அருகே நடைமுறையில் இருந்த பேருந்து நிலையத்தை மாற்றியதால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிப்படைவதாக கூறி மாவட்ட ஆட்சியரை அலுவலகத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டுமென வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினார்கள்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வணிகர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சரவணன் தலைமையிலான வணிகர்கள் மற்றும் திமிரி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர் மேலும் அவர்கள் வழங்கிய புகார் மனுவில் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் திமிரியில் பல ஆண்டுகளாக எதிர் பார்த்து இருந்த புதியதாக பேருந்து நிலையம் நவீன முறையில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது இதற்கிடையே, திமிரி நேரு பஜார், மார்க்கெட் சாலை,  காவனூர் சாலை, ஆரணி சாலை மற்றும் பழைய  பஜார், நம்பரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள்,  தள்ளுவண்டி, சாலையோர கடை மூலமாக பொருட்களை விற்பனை செய்து வருகின்றோம் ஆனால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால்,  நேரு பஜாரில் எந்தவொரு பேருந்துகளும் நின்று செல்வதில்லை இதனால்  பஜாா் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது மேலும் வியாபாரம் பெருமளவில் குறைந்து விட்டதால் திமிரி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்..  

இந்த நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் மாணவர்கள் சென்று வருவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.  இதனால் மாணவர்களின்  சேர்க்கையும் வரும் கல்வியாண்டில் குறைய வாய்ப்பு உள்ளது எனவே பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தினால் வியாபாரிகளுக்கு வாழ்வதாரம் பாதித்துக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் கல்வி  பயிலும் மாணவர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவே திமிரி நேரு பஜாரில் மீண்டும் அரசு பேருந்துகள் நின்றுச்செல்ல வேண்டும் " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்..

 திருப்பத்தூர்மாவட்டம்       28-2-25

 
வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி   7 ஆம் வகுப்பு மாணவிகளிடம் தற்காலிக ஆங்கில ஆசிரியர் பாலியல் சீண்டல் போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது-விவகாரம்பள்ளி மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆசிரியரை விடுவிக்க  வலியுறுத்தி சாலை மறியல்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலூர், மலை ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்படியில் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.அங்கு ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த பிரபு இவர் அங்குள்ள கிருஷ்ணாபுரத்தில் தங்கி தற்காலிக ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற கம்ப்யூட்டர் தேர்வின் போது ஏழாம் வகுப்பு படிக்கக்கூடிய 6 மாணவிகளிடம் ஆங்கில ஆசிரியர் பிரபு பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு உதவி மையம் என் 1098 புகார் தெரிவித்துள்ளனர்.அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மேத்யூ என்பவர் நேரடியாக அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட 6 மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த 24-ஆம் தேதி  வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதுபுகாரின் அடிப்படையில் வாணியம்பாடி நகர காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் அப்பகுதிக்குச் சென்று பிரபுவை  கைது! செய்தனர்.மேலும் அவர் மீது போஸ்கோ சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஆசிரியர் தவறு செய்யவில்லை அவர் மீது தவறான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அப்பள்ளியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆலங்காயம்- ஜமுனாமத்தூர் செல்லக்கூடிய சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தகவல் அறிந்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இருந்த போதிலும் அவர்கள் கலந்து செல்லாத நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோடி மற்றும் வாணியம்பாடி தாசில்தார் உமா ரம்யா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 ராணிப்பேட்டைமாவட்டம்      28-2-25


செல்போனை விட புத்தக வாசித்தால் சிந்தனையை உருவாக்கும் புத்தக திருவிழா தொடக்க விழாவில் அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை சந்தைமேட்டு பகுதியில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்துக் கொண்டு 60 அரங்குகள் கொண்ட புத்தக கண்காட்சி அரங்கினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்ததோடு புத்தக அரங்குகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டு புத்தகத்தின் விலையை கேட்டறிந்தார்.இந்த புத்தக திருவிழாவில் கதை புத்தகம், கவிதை புத்தகம், நாவல் புத்தகம், அறிஞர்கள் புத்தகம் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் ஆர் காந்தி,மாணவர்கள் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு புத்தகத்தை வாங்கி கொடுக்க வேண்டும்.  நாட்டுக்கு நல்லது செய்ய உண்மையை புரிந்து செயல்பட புத்தக வாசிப்பு அவசியம், செல்போன் விட புத்தகம் வாசிப்பது சிந்தனையை வளரச் செய்யும் மாவட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி அரசு சார்பில் அமைத்துள்ள நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் முதல்வரின் உத்தரவின்படி  நூலகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறையின் கீழ் 21 பயனாளிகளுக்கு 3 கோடியே 35 லட்ச மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கல்லூரி, பள்ளி  மாணவர்கள் புத்தக அரங்கில் சென்று தங்களுக்கு தேவையான புத்தகத்தினை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை