செய்திகள் சில

 திருப்பத்தூர்மாவட்டம்  

வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சி. பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் தப்பி ஒட்டம். புகாரின் பேரில் நகர போலீஸார் விசாரணை.

-----------------------
திருப்பத்தூர் மாவட்ட வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் அருண்(35). இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கார் ஒட்டுனராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி, 5 வயது மகள் அக்ஷரா, 3 வயது மகன் அஷ்விக் ஆகியோர் நியூடவுன் பகுதி சேஷாகிரி ராவ் தெருவில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி வருகின்றனர். பிள்ளைகள் இருவரும் அருகில் உள்ள பள்ளிக்கு கல்வி பயின்ற சென்று வருகின்றனர். கணவர் அருண் வாரம் ஒரு முறை வீட்டிற்க்கு வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் வீட்டில் தனியாக பெண் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து கதுவை தட்டி உள்ளார். உறவினர் வந்து இருக்கும் என்ற கருதி அஸ்வினி காதுவை திறந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் தன்னுடைய ஆண் உறுப்பு காட்டி பெண்ணை பாலியல் சீண்டலுக்கு முயற்சித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சல்யிட்டதால் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஒட்டம் பிடித்துள்ளார்.இதனை தொடர்ந்து பெண் உடனடியாக  காவல் எண் 100 க்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.பின்னர் சம்பவம் குறித்து தன்னுடைய கணவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு  பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர்    27-2-25

 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போதை மறுவாழ்வு  மீட்சி மையம் கலங்கரையை  தமிழக முதல்வர் காணொளியில் துவங்கியதை அடுத்து மறுவாழ்வு மீட்சி மையத்தை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் திறந்து வைத்தார் - போதையிலிருந்து முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நோக்கில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி பேச்சு 
__________________________________________
        வேலூர்மாவட்டம்,அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலங்கரை என்ற பெயரில் போதை தடுப்பு   மருத்துவம் மறுவாழ்வு மீட்சி மையத்தை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் துவங்கியதை அடுத்து அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மேயர் சுஜாதா,அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ரோஷினி உள்ளிட்டோரும் திரளான மருத்துவர்களும் மாணவ மாணவிகளும் இவ்விழாவில் பங்கேற்றனர் இந்த மறுவாழ்வு மீட்சி மையத்தி போதையால் பாதிக்கபடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி பிரிவுகளாக சிகிச்சை அளிக்கப்படவுள்ளது இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி போதையிலிருந்து அடிமையானவர்கள் மீட்பதற்காக கலங்கரை எப்படி கப்பல்களுக்கு வெளிச்சம் தருகிறதோ அதை போல் இந்த திட்டம் மூலம் மருத்துவர்களாகிய நீங்கள் போதையால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டுமென பேசினார்

வேலூர்   

கஞ்சா போதைக்கு அடிமையான வாலிபர் ஒருவர்இருசக்கர வாகனங்களை திருடி அடமானம் மற்றும் குறைந்த விலைக்கு விற்பனை செய்த நகரிக்குப்பம் வாலிபரை தக்கோலம் போலீசார் கைது செய்தனர்.  அவனிடமிருந்து 8 இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் போலீசார் தக்கோலம் கூட்ரோடு பகுதியில் சப் இன்ஸ்பெக்டர்கள் கோபி, வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் திருடி கொண்டு வந்தது என்பது தெரிந்தது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நகரிகுப்பம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த விஷ்ணு (21) என்பது தெரிய வந்தது.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அரக்கோணம் ரயில் நிலையம்,  திருத்தணி, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி ரூபாய் 2000 முதல் 4000 வரை அடமானம் வைத்து தெரிந்தது. மேலும் இருசக்கர வாகனங்களை ரூபாய் 3000க்கு விற்பனை செய்த அதிர்ச்சி தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா போதைக்கு அடிமையான விஷ்ணு புல்லட் உள்ளிட்ட இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை அல்லது அடமானம் வைத்து கஞ்சா வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது.

 ராணிப்பேட்டைமாவட்டம்  

 தக்கோலம் பேரூராட்சியில் அதிமுக வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர் லாவண்யா பேசுகையில் , 5வது வார்டுக்கு உட்பட்ட எல்லா தெருவிலும் சாலைகள் சரியில்லை. எல்லா தெருக்களிலும் குப்பைகள் வாருவதில்லை.  விழா காலங்களில் மட்டுமே  குப்பைகள் மற்றும் கால்வாய்களை சுத்தம் செய்கின்றனர்.  என்னுடைய வார்டு மட்டும் இன்றி அதிமுக கவுன்சிலர்களுக்கு உட்பட்ட வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்றார்.

 அதற்கு பதில் அளித்து பேரூராட்சி தலைவர் நாகராஜன் பேசுகையில்,  கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் பணிகள் நடக்கிறது.  அதிமுக வார்டில் எவ்வளவு பணிகள் இதுவரை நடைபெற்றுள்ளது என்ற விவரம் செயல் அலுவலர் மூலமாக அதிமுக கவுன்சிலர்களுக்கு புள்ளி விவரங்கள் வழங்கப்படும் என்றார்.

 இதைத் தொடர்ந்து அதிமுக வார்டுகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 ராணிப்பேட்டைமாவட்டம்  

 அரக்கோணத்தில் மின்விபத்து தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதிநகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்விபத்து தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அரக்கோணம் உதவி செயற்பொறியாளர் புனிதா கலந்துகொண்டு சென்னையில் 2 பிள்ளைகள் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது டிரான்ஸ்பார்மரில் பந்து விழுந்துள்ளது . அதை எடுக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது.  அது போன்ற செயல்களில் மாணவ, மாணவிகள் யாரும் ஈடுபடக்கூடாது.குறிப்பாக மின் கம்பத்தின் அருகில் ஸ்டே வயர் இருக்கும்.  அதில் மாடு, ஆடுகள் ஆகியவற்றை கட்டக் கூடாது . மின்கம்பி எங்காவது அறுந்து விழுந்து கிடந்தால் அதை கையால் தொடவும்,  மிதிக்கவும் கூடாது .குறிப்பாக பட்டம் விடும்போது ஆண்கள் பெண்கள் அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மின் கம்பியில் பட்டம் சிக்கும் வகையில் பட்டத்தை பறக்க விடக்கூடாது.  வீடுகளில் உள்ள சுவிட்சுகள் பழுதடைந்து இருந்தால் அதை உடனடியாக மாற்ற வேண்டும்.  கையில் ஈரத்துடன் ஸ்விட்ச் போடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் .மின் விபத்து தடுப்பது குறித்து பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மாணவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.  அதற்காகவே மாணவ மாணவிகள் இடமிருந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  அரக்கோணத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார் கூட்டத்தில் இளநிலை பொறியாளர்கள் கீதா,  வெங்கடேசன்,  நகர பொறியாளர் ஜெய்சங்கர் , போர்மேன் முருகன், வணிக ஆய்வாளர்கள் உமாபதி, மோனிகா,  லைன் மேன்கள் பாலசுப்பிரமணி, சங்கர் மற்றும் மின்வாரியத் துறையினர் கலந்து கொண்டனர்.

வேலூர்   

 திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 5 வருடங்கள் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர்.மனவிரக்தியில் காதலி தூக்கிட்டு தற்கொலை. ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா!


வேலூர் மாவட்டம் நஞ்சிகொண்டாபுரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன்  (31) என்பவரும் பக்கத்து கிராமமான வேடைக்கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்த அன்பரசி (28) எனற பெண்ணும் ஐந்து வருடமாக காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் 15- நாட்களுக்கு முன்பு அவரது அக்கா மகளை ரகைய திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதனால் விரக்தியடைந்த அன்பரசி நேற்று மதியம் அவர்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.5- வருடங்களாக காதலித்துவிட்டு வேறுப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட ராணுவ வீரர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யக்கோரி வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும்  உறவினர்கள் தர்ணா அமர்ந்திருக்கிறார்கள்தற்கொலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், புகாரின் பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸ் காலம் தாமதம் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டுகிறனர்.

வேலூர்   

 வள்ளிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்றனர் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் பதக்கங்களை வழங்கி பாராட்டினார் 
_____________________________________
    வேலூர்மாவட்டம்,காட்பாடி அடுத்த வள்ளிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் பள்ளிகளுக்கிடையேயான நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மொத்தம் 62 பதக்கங்களை வென்றுள்ளனர் இதில் 29 மாணவர்கள் முதல் இடமும்,17 பேர் இரண்டாம் இடமும் ,16 பேர் மூன்றாம் இடமும் வென்றனர் இவர்களுக்கு பதக்கங்கள் சான்றிதழ்களையும் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் வழங்கிபாராட்டினார் இவ்விழாவில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் திரளான மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்

 ராணிப்பேட்டைமாவட்டம்  

சோளிங்கர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் கைது செய்து. போக்சோ சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.



ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி முதலியார் தெருவில் அரசு பள்ளியில் படித்து வரும் 7 ம் வகுப்பு  மாணவிக்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர்  கண்ணன் 68 . என்பவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தருவதாக பள்ளி ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் சோளிங்கர் ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீசார்  கண்ணனை கைது செய்து விசாரணை செய்தனர். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையான தெரியவந்ததும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 வேலூர்    

 வேலூரில் மது போதையில் ரகலையில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட் 

    வேலூர்மாவட்டம்,கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் 24-ம் தேதி அன்று இரவு பெண் காவலர்கள் முன்னிலையில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட விருதம்பட்டு காவல் நிலைய காவலர்  அருண் கண்மணி சஸ்பெண்ட் ரகளையில் ஈடுபட்ட அருண் கண்மணியை 25-ம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட அருண் கண்மணியை இன்று சஸ்பெண்ட் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவு பிறப்பித்துள்ளது


 

இருசக்கர வாகனத்தின்  ஒலிபெருக்கி எழுப்பிய தகராறில் முதியவரை அடித்து கொன்ற மூன்று இளைஞர்கள் மேல்  வழக்குகள் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைப்பு.


வேலூர் வேலப்பாடி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (55) என்பவர் சிவராத்திரி திருவிழாவை கொண்டாடுவதற்காக மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பில்டர் பெட் சாலையில் எக்ஸ் எல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவருக்கு முன்பு டியோ இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் சென்றுள்ளார்கள் அப்பொழுது பின்னே வந்த வெங்கடேசன் இருசக்கர வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கியை அடித்துள்ளார் அதனால் ஆத்திரமடைந்த அந்த மூன்று இளைஞர்கள் வெங்கடேசனை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது பின்பு வெங்கடேசனும் தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறி உள்ளதுஇதில் மூன்று இளைஞர்களும் வெங்கடேசனை தாக்கியதில் மயங்கி கீழே விழுந்ததும். மூன்று இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு காவல் துறையினர் வெங்கடேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு பெண்ட்லெண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு பரிசோதித்த மருத்துவர் வெங்கடேசன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதன் பின் தப்பி ஓடிய 3 இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் மக்கான் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (20), தோட்டப்பாளைத்தை சேர்ந்த அஜய் (26), ஜவகர் (26) ஆகிய 3 பேரை கைது
செய்து விசாரணைக்கு பின்பு 103 பிரிவின் கீழ்  கொலை வழக்கு, மற்றும் ஆபாச வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

Comments

Popular posts from this blog

முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

வீட்டு வசதி வாரிய செயலாளருக்கு பாராட்டு

கோரிக்கை