கொலை
வேலூரில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை
3 வாலிபர்கள் கைது
வேலூர்,
வேலூரில் நேற்றிரவு குடிபோதையில் பைக்கில் சென்றுகொண்டு இருந்தபோது ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர் வேலப்பாடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(55). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்றிரவு 9.45 மணியளவில் தனது பைக்கில் வெங்கடேசன் வேலூர் பில்டர்பெட்ட ரோட்டில் இருந்து கமிச்சரி பஜார் வழியாக சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக ஒரு பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் வெங்கடேசன் பைக் மீது மோதுவது போல் வந்தாக கூறப்படுகிறது. இதை வெங்கடேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டு ஆபசமாக பேசியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் 3 வாலிபர்களும் சேர்ந்து வெங்கடசனை கையால் சரமாரியாக தாக்கினர். இதனால் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து 3 வாலிபர்களும் தப்பி ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அக்கபக்கத்தினர்வெஙகடேசனை மீட்டு வேலூர் பெண்ட்லேன்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெங்கடேசனை அடித்துகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டிய நபர்கள் யார்? என்பது குறித்து கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் வேலூர் மக்கன் அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரகாஷ்(20), தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி தெருவை சேர்ந்த அஜய்(20), தோட்டப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்த ஜவகர்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து புதிய பஸ்நிலையம் அருகே பதுங்கி இருந்த 3 பேரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வெங்கடேசன் தனது பைக்கில் வந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த 3 வாலிபர்களும் வேகமாகவும், மோதுவது போல் வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் வெங்கடேசனை வழிமறித்து குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். ரத்த காயம் ஏதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் கைகளால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி உள்ளனர். உடனடியாக 3 பேரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment