தர்ணா
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
காதலித்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் தர்ணா
வேலூர் மாவட்டம், நஞ்சுண்டாபுரம், கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். ராணுவ வீரர்.இவரும் அதே பகுதியை சேர்ந்த அன்பரசி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் பிரபாகரன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவரது சகோதரி மகளை திருமணம் செய்து கொண்டார். தன்னை காதலித்து ஏமாற்றிய பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நண்பரசி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அன்பரசி நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது உறவினர்கள் கதறி பிடித்தனர்.
இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அன்பரசி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலை ஆஸ்பத்திரிக்கு வந்த அன்பரசியின் உறவினர்கள் அவரது பிணத்தை வாங்க மறுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுக்கா போலீசார் மற்றும் ஜமுனாமரத்தூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment